கனடாவில் புலிகளின் ஆயுதக்கொள்வனவு மையம் -மேலுமிருவர் கனடாவில் கைது

Read Time:3 Minute, 9 Second

ltte.ottsuntamil-usa.jpgபுலிகள் இயக்கத்திற்காக ஆயுதங்கள் கொள்வனவு செய்யும் மத்தியஸ்தானம் கனடாவில் இயங்கி வருவதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ ரகசிய உளவு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் 08 பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர். அதே நாளிலேயே கனடாவிலும் 05 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இவர்கள் தொடர்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்;டுள்ளன.

மேலுமிருவர் கனடாவில் கைது- புலிகளுக்கு விமானங்களை அழிக்கும் ஏவுகணைகளை கொள்வனவு செய்ய உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட மேலும் இரு தமிழர்கள் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதீபன் நடராஜா, றமணன் மயில்வாகனம் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களிருவரும் இன்று கனேடிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் புலிகளுக்கு ஆயுதம் பெறும் குற்றச்சாட்டில் கனடாவில் கைதானோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிலும் இந்த குற்றச்சாட்டின் பேரில் 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகளுக்கு ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் தளம் கனடாவில் இயங்குவதாக அமெரிக்க புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

புலிகளுக்கு விமான அழிப்பு ஏவுகனைகள் 100, ஏ.கே ரகத் துப்பாக்கிகள் 500, மற்றும் கப்பல் அழிப்பு ஏவுகனைகள், யுத்தத் தாங்கி அழிப்பு ஏவுகனைகள் நைட்விசன் என்பனவற்றை கொள்வனவு செய்ய இவர்கள் முயற்சித்ததாக கனேடிய பொலிஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. குறித்த ஆயுதங்களை கொள்வனவு செய்த பின்னர் அவற்றை சர்வதேச கடலின் ஊடாக எடுத்து வந்து புலிகளின் கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக அமெரிக்க உளவுச் சேவை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இவர்கள் அனைவரும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் பொட்டம்மான் (சண்முகநாதன் சிவசங்கர்) ஆகியோருடன் நேரடி சந்திப்புகளை நடத்தியுள்ளதாகவும் அமெரிக்க உளவுசேவை தெரிவித்துள்ளது.

ltte.ottsuntamil-usa.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செப்டம்பர் 7ல் சந்திர கிரகணம்
Next post கொழும்பில் விமான நிலையத்தை தகர்க்க சதி: பெண்கள் உள்பட 16 பேர் கைது