ஹொலிவூட் நட்சத்திரங்களின் 2016 வசூல் பட்டியலில் ஸ்கார்லெட் ஜொஹான்சன் முதலிடம்..!!

Read Time:2 Minute, 23 Second

sddsddஹொலி­வூட்டில் கடந்த வருடம் திரைப்­ப­டங்­களின் டிக்கெட் விற்­பனை மூலம் அதிக வசூல் செய்த நட்­சத்­தி­ர­மாக நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்சன் அறி­விக்­கப்­பட்­டுள்ளார்.

ஏனைய அனைத்து நடிக நடி­க­ரையும் விட நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடித்த படங்கள் அதிக தொகை வசூ­லித்­துள்­ளன என போர்ப்ஸ் சஞ்­சிகை தெரி­வித்­துள்­ளது.

ஸ்கார்லெட் ஜொஹான்­சனின் திரைப்­ப­டங்கள் கடந்த வருடம் 120 கோடி டொலர்­களை வசூ­லித்­துள்­ள­தாக போர்ப்ஸ் சஞ்­சகை கணித்­துள்­ளது.

“கெப்டன் அமெ­ரிக்கா சிவில் வோர்” படத்தில் பிளெக் விடோ எனும் பாத்­தி­ரத்தில் ஸ்கார்லெட் ஜொஹான்சன் நடித்­தி­ருந்தார்.

அப் ­படம் 115 கோடி டொலர்­களை வசூ­லித்­தது. ஹெய்ல் சீசர் படம் 6.3 கோடி டொலர்­களை வசூ­லித்­தது.

இதன்மூலம் இப்­ பட்­டி­யலில் முத­லி­டத்தைப் பெற்­றுள்ளார் ஸ்கார்லெட் ஜொஹான்சன்.

“கெப்டன் அமெ­ரிக்கா சிவில் வோர்” படத்தில் நடித்த நடி­கர்கள் கிறிஸ் இவான்ஸ், ரொபர்ட் டோனி ஜூனியர் ஆகியோர் இப் ­பட்­டி­யலில் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்­து­கொண்­டுள்­ளனர்.

கடந்த வருடம் இவர்­களின் வேறு படங்கள் வெளியா­க­வில்லை. எனி­மேஷன் திரைப்­ப­டங்­களின் வசூலை இப்­ பட்­டியல் தயா­ரிப்பில் போர்ப்ஸ் சஞ்­சிகை கருத்­திற்­கொள்­ள­வில்லை.

எனி­மேஷன் படங்­களும் கருத்­திற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தால் ஸ்கார்லெட் ஜொஹான்­சனின் படங்­களின் வசூல் தொகை மேலும் அதி­க­மாக இருந்­தி­ருக்கும்.

ஜங்கிள் புக் எனும் எனி­மேஷன் படத்­துக்கு அவர் குரல் கொடுத்­தி­ருந்தார். அப்­ படம் உல­கா­விய ரீதியில் 96.6 கோடி டொலர்­களை வசூ­லித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போனில் கேம் விளையாட்டில் மூழ்கிய தாய் – நீச்சல் குளத்தில் மூழ்கிய 4 வயது மகன்..!! (வீடியோ)
Next post தாம்பத்தியம்ன்னா இதுதான்யா தாம்பத்தியம்..!!