நயன்தாராவுக்காக குரல் கொடுத்த அனிருத்..!!

Read Time:1 Minute, 25 Second

201701261341044159_Anirudh-gives-voice-for-Nayanthara_SECVPFஇயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகி வரும் படம் `டோரா’. தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இப்படத்தை சற்குணம், ஹிதேஷ் ஜபாக் தயாரித்து வருகின்றனர்.

விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்தில் அனிருத் “ரா ரா ரா” என்ற ஒரு பாடலை பாடியுள்ளார். தீயசக்திகளை எதிர்த்து நிற்கும் நயன்தாராவுக்கு பொருத்தமாக அனிருத் குரலில் இப்பாடல் சிறப்பாக அமைந்துள்ளதாக இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விவேக்-மெர்வின் இசையில் `வடகறி’ படத்தில் “லோ ஆன லைஃப்” என்ற பாடலையும், `புகழ்’ படத்தில் “நாங்க பொடியன்” என்ற பாடலையும் அனிருத் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘டோரா’ படம்தவிர நயன்தாரா ‘கொலையுதிர் காலம்’, ‘இமைக்கா நொடிகள்’, `அறம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் கடலுக்கு அடியில் திருமணம் செய்துள்ள காதல் ஜோடி..!!
Next post கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி..!!