பனிக்காலத்தில் சரும வறட்சி ஏற்படுவதற்கான காரணங்கள்..!!

Read Time:2 Minute, 9 Second

201701271002033948_dryness-of-the-skin-in-winter_SECVPFபனிக்காலத்தில் பெரும்பாலனோர் சருமம் வறட்சியால் அவதிப்படுகின்றனர். சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன் காணப்படும். இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் பல இருந்தாலும், ஒரு சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது. இத்தகைய வறட்சியான சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி உடலுக்கு சில ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

பெரும்பாலும் உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும் மிகக் குறைந்த வெப்பநிலை, மிகக் குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் சரும வறட்சி ஏற்படும். அதிகநேரம் வெந்நீரில் சருமத்தை நனைப்பதாலும் சருமம் வறட்சியடைந்து விடுகிறது

இந்த வறட்சியைப் போக்குவதற்கு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது கிரீம்களை பூசிக்கொள்ளலாம். பொதுவாக சருமத்தில் இயற்கையாக உள்ள எண்ணெய் பசையானது சருமத்தை நன்கு பாதுகாத்து இறுக்கமாக இருக்க உதவுகிறது. தினமும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். காரமில்லாத மிதமான சோப்பு வகைகள் அல்லது மூலிகைகள் கலந்த சோப்புகள், கிரீம்களை பயன்படுத்துவது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட வாய்ப்புகள் குறைந்ததால் ஓட்டல் தொடங்கும் அனுஷ்கா..!!
Next post நீரிழிவு நோயை குணப்படுத்தும் பீர்க்கங்காய்..!!