பெண்கள் ஆபத்தான சுழலை எதிர்கொள்வது எப்படி?..!!

Read Time:4 Minute, 50 Second

Capture-6-450x261பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன. முன்னிரவில் மட்டுமல்ல, பகலில் ஆளற்ற சாலைகளில் செல்ல நேரிடும் பொழுதுகளில்கூட, ‘இந்தப் பட்டியலில் நான் சேர்ந்துவிடுவேனோ’ எனப் பதற்றம் கொள்கிறார்கள் பெண்கள்.

பெண்கள் எதிர்பாராத தாக்குதலைச் சந்திக்கும்போது, அந்தச் சூழலை எப்படிக் கையாள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

”ஒரு பெண் தாக்குதலுக்கு உள்ளாகும்போது அவர் மூளை எவ்வாறு செயல்படும் என்பது, வேலையில் அவர் வெளிப்படுத்தும் தன்னம்பிக்கையைப் பொருத்தோ அல்லது அவர் பெற்றுள்ள பட்டங்களின் அடிப்படையிலோ இல்லை. தாக்குதலின் வகை, தாக்குபவர் யார், தாக்குதல் நடக்கும்போது அந்தப் பெண்ணின் மனநிலை போன்ற விஷயங்களைப் பொருத்துதான் அவர் அந்த நேரத்தில் புரியும் எதிர்வினை அமையும்.

தாக்குதல், எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத என இரண்டு வகைப்படும். எதிர்பார்த்த தாக்குதல் நடக்கும்போது, மூளை நிதானமாக யோசித்து சிறப்பாகச் செயல்படும். இவை பொதுவாக வீட்டுக்குள், உறவுகளுக்கு அல்லது பழக்கமானவர்களுக்கு இடையில் நிகழக்கூடியவை.

ஆனால், வீட்டுக்கு வெளியே திருட்டு, பாலியல் தொல்லை என எதிர்பாராத தாக்குதலைச் சந்திக்கும்போது, அந்தப் பெண்ணின் மூளையில் ஒரு தாக்குதலை எதிர்கொள்ளும் அளவுக்கான யோசனையோ திட்டமிடலோ இருக்காது.

பெண்கள் எங்கு சென்றாலும் அச்சத்துடனேயே இருக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. எந்த நேரத்திலும் தன்னை ஆபத்து நெருங்கலாம் என்ற தற்காப்புநிலையோடு அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நிலைகுலையாமல், அந்த நிமிடம் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்று யோசித்து அவர்கள் மூளை சட்டென ரியாக்ட் செய்ய வேண்டும்.

தாக்குதலுக்கு உள்ளாகும்போது பெண்கள் திரும்பத் தாக்க நினைக்கக் கூடாது. தற்காப்புக் கலை தெரிந்து இருந்தாலும், முதலில் அவர்கள் செய்யவேண்டியது, அந்த இடத்தைவிட்டு தப்பிச்செல்ல முயல்வதுதான். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இதே அறிவுரைதான். அந்த நிமிடத்தில் பலத்தைக் காண்பிக்க நினைக்காமல், மூளையைப் பயன்படுத்தவேண்டும்.

ஒருவேளை தப்பிக்க முடியாதபடி சிக்கிக்கொண்டால், இப்போது பலத்தை முழு நம்பிக்கையுடன் பிரயோகித்து எதிர் தாக்குதல் புரிய வேண்டும். எந்த நிலையிலும் ‘நம்மால் முடியாது’ என்று தாக்குதலை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

ரியாக்ட் செய்யாமல் இருப்பதும், தவறாக ரியாக்ட் செய்வதும் ஒன்றுதான். மூளையை இந்த வழிகளில் எல்லாம் யோசிக்க தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொதுவாக பெண்கள் தங்களைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை கவனிக்கத் தவறுகிறார்கள். அல்லது, அந்த நபரால் தனக்கு பெரிய ஆபத்து எதுவும் நேர்ந்துவிடாது என்று நினைக்கிறார்கள்.

”ஒருவேளை, இந்த முன்னெச்சரிக்கைகளை எல்லாம் மீறி ஒரு தாக்குதல் நடந்துவிட்டது என்றால், குடும்ப கௌரவம், சமூகம் போன்ற காரணங்கள் சொல்லி அதை மறைக்கக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்கும் நடக்கும் அநீதியை ஏற்றுக்கொள்ளாதீர்கள். உங்களை வார்த்தையால் ஒருவர் தாக்கினால்கூட, அதற்கு எதிர்வினை புரியுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவனின் விசித்திர கண்கள்!… தீயாக பரவும் காணொளி..!! (பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)
Next post சரும வறட்சி ஏன் ஏற்படுகிறது?..!!