அமெரிக்க குடியுரிமை: வெளிநாட்டினர் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடிவு..!!

Read Time:1 Minute, 57 Second

201702091102281465_US-decision-to-reduce-by-half-number-of-resident-aliens_SECVPFஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதற்கு பிறகு வெளிநாட்டினருக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் வெளிநாட்டினரை அங்கிருந்து வெளியேற்ற அவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அங்கு தங்கி பணிபுரிய வசதியாக வெளிநாட்டினர் 10 லட்சம் பேருக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இத்துடன் 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்த வசதிகளை இந்தியர்கள் அதிக அளவில் பெற்று வந்தனர்.

ஆனால், இதில் மாற்றங்களை கொண்டு வர டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது. இதன் சட்ட முன்வடிவை 2 செனட் உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளனர். இது நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தால் இனி அதிக அளவில் வெளிநாட்டினர் குடியேற முடியாது.

அமெரிக்க குடியுரிமை பெற்று நிரந்தரமாக இருப்பவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் திட்டத்துடன் இந்த சட்டம் வருகிறது.

இதனால் குறிப்பாக இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே பல ஆண்டுகளாக அங்கு தங்கி இருக்கும் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற முடியாத நிலை ஏற்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுந்தர்யாவின் இயக்கத்தை புகழ்ந்து தள்ளிய விவேக்..!!
Next post இந்த பெண் செய்யும் கேவலமான வேலையை பாருங்கள்..!! (அதிர்ச்சி வீடியோ)