வீராங்­க­னையின் ஆடை கழன்­றதால் ரத்துச் செய்­யப்­பட்ட WWE ரெஸ்லிங் போட்டி..!! (வீடியோ)

Read Time:3 Minute, 28 Second

223581WWE ரெஸ்லிங் (மல்யுத்த) போட்­டி­யின்­போது வீராங்­கனை ஒரு­வரின் ஆடை கழன்­றதால் போட்டி ரத்துச் செய்­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் அண்­மை யில் இடம்­பெற்­றது.

WWE மல்­யுத்­தத்தில் மிகப் பிர­ப­ல­மான வீராங்­க­னை­களில் ஒரு­வ­ரான ஈவா மேரிக்கே இந்த நிலை ஏற்­பட்­டது.

32 வய­தான ஈவா மேரி, 2013 ஆம் ஆண்­டி­லி­ருந்து WWE போட்­டி­களில் பங்­கு­பற்றி வரு­கிறார்.

அண்­மைக் ­கா­லத்தில் தொடர்ச்­சி­யாக பல வீராங்­க­னை­களை அவர் தோற்­க­டித்து வெற்றி வாகை சூடி வந்தார்.

இந்­நி­லையில், அண்­மையில் நடை­பெற்ற போட்­டி­யொன்றில் அயர்­லாந்து வீராங்­கனை பெக்கி லின்­சுடன் வுடன் ஈவா மேரி மோதினர்.

இப்­ போட்டி நடை­பெற்­றுக் ­கொண்­டி­ருந்­த­போது, ஈவா மேரியின் பிரா திடீ­ரென கழன்­றது. இதனால் அவரின் மார்­ப­கங்கள் வெளிப்­பட்­டதால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

ஈவா மேரி அதிர்ச்­சி­ய­டைந்த நிலையில் தனது மார்­ப­கங்­களை கைகளால் மறைத்­துக் ­கொண்­டி­ருந்தார். சில விநா­டி­களில் போட்­டியின் மத்­தி­யஸ்தர் விரைந்து வந்து ஈவா மேரியின் மீது துவாய் ஒன்றை போர்த்­தி­விட்டார்.

அத்­துடன் WWE அதி­கா­ரி­க­ளிடம் ஓடிச் சென்ற மத்­தி­யஸ்தர், ‘அவர் (ஈவா மேரி) போட்­டியில் பங்­கு­பற்ற முடி­யாத நிலையில் இருக்­கிறார். இந்தப் போட்­டியை நாம் தொடர்ந்து நடத்­தப்­போ­வ­தில்லை. அவரால் போட்­டியில் பங்­கு­பற்ற முடி­யாது’ என்றார்.

வீராங்­க­னையின் ஆடை கழன்­றதால் ரத்துச் செய்­யப்­பட்ட WWE ரெஸ்லிங் போட்டி அதன் பின்னர் போட்­டியின் அறி­விப்­பாளர், ஒலி­வாங்­கியை கையில் எடுத்து, ‘ஈவா மேரியின் ஆடையில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக இப்­ போட்­டியை நடத்த முடி­யாது என பார்­வை­யா­ளர்­க­ளுக்கு அறி­வித்தார்.

இந்த அறி­விப்பு ஈவாவின் போட்­டி­யா­ள­ரான பெக்கி லின்­சுக்கு ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ‘நான் ஒரு போராளி. ஒவ்­வொரு தட­வையும் நான் சண்­டை­யி­டு­வ­தற்குத் தயா­ரா­கவே களத்­துக்கு வரு­கிறேன்’ என பெக்கி லின்ச் கூறினார்.

முன்னர் ஒரு தட­வையும் பெக்கி லின்­சு­ட­னான போட்­டி­யின்­போது கணுக்­காலில் உபாதை, ஏற்­பட்­டதால் போட்­டி­ய­ிலி­ருந்து விலகியிருந்தார் ஈவா மேரி.

இதேவேளை, ஆடையில் கோளாறு ஏற்பட்டு மார்பகத்தை வெளிப்படுத்திய குற்றச்சாட்டில் ஈவா மேரிக்கு 30 நாள் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரவிந்த்சாமி படத்தில் இருந்து விலகிய டேனியல் பாலாஜி..!!
Next post செக்ஸ் வைத்துக்கொள்ள ஒருவர் என்னை கட்டாயப்படுத்தினால்..!!