விசா நடைமுறையை எளிமையாக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்..!!

Read Time:2 Minute, 9 Second

201702171652561690_New-immigration-order-to-address-courts-concerns-Trump_SECVPFஅமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது குடியுரிமை மற்றும் விசா கொள்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் டிரம்ப்பின் கொள்கை முடிவுகள் மீது அதிருப்தி தெரிவித்த வாஷிங்டன் நீதிமன்றம், அதிபரின் உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடையும் விதித்திருந்தது.

இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள அதிபரின் வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப், ‘அரசின் குடியுரிமை மற்றும் விசா தொடர்பான முந்தைய உத்தரவை கோர்ட்டின் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றியமைப்பது தொடர்பாக நாட்டின் தலைசிறந்த சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்’ என தெரிவித்தார்.

முன்னதாக, கோர்ட்டின் தடை உத்தரவை வெகு மோசமான முடிவு, நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான முடிவு என டிரம்ப் விமர்சித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

டிரம்ப்பின் இந்த திடீர் மனமாற்றம், எங்களுக்கு கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி என்று வாஷிங்டன் மாநில அட்டார்னி ஜெனரல் பாப் பெர்குசன் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாப்பிட்ட உடன் கண்டிப்பாக செய்ய கூடாதவை..!!
Next post வழி கேட்க, ஹெலிகொப்டரை தரையிறக்கிய விமானி…!! (வீடியோ)