‘பாகுபலி-2’ விளம்பரமே இல்லாமல் ஹிட்டாகும்: நாசர் பேச்சு..!!

Read Time:3 Minute, 6 Second

201704091750445630_Nasser-says-Baahubali-hit-without-promotion_SECVPFஎஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்து வெற்றிநடை போட்ட ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகிற ஏப்ரல் 28-ந் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இதையொட்டி படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர் சந்தித்து படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது, இப்படத்தில் பிஜிபல்லவ தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாசர் பேசும்போது,

‘பாகுபலி-2’ ஒரு விளம்பரமே இல்லாமல் ரிலீஸ் தேதியை மட்டும் அறிவித்து வெளியிட்டிருந்தாலே ஹிட்டாகியிருக்கும். ஆனால், விளம்பரம் செய்யவேண்டும் என்ற கடமையில் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு வேறு எந்த ஹீரோவும் பொருந்தமாட்டார். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எல்லோருக்கும் தெரியும். இப்படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் இயக்குனர் கஷ்டமான ஒரு விஷயத்தை கொடுத்தார். அதாவது, அனுஷ்கா உள்ளிட்ட அனைவரும் சிக்ஸ் பேக் வைக்கவேண்டும் என்பதுதான். ஆனால், எனக்கு மட்டும்தான் பேமிலி பேக் வைக்கவேண்டும் என்று சொன்னார்.

ராஜமௌலி முதலில் இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னதும், அவர் சொன்னதுமாதிரி இந்த படத்தை எடுத்துவிட முடியுமா? என்ற பயம் இருந்தது. கடைசியில், இந்த படத்தில் நீங்கள் இல்லையென்றால் கதையே கிடையாது என்று சொன்னார். அந்த நேரத்தில்தான் எனக்குள் ஒரு பொறி தட்டியது. நான் தான் பாகுபலி என்பதுபோல் எனக்கு ஒரு உத்வேகத்தை ராஜமௌலி கொடுத்தார்.

இந்த படம் எத்தனை கோடிகள் சம்பாதிக்கும் என்பதெல்லாம் ஒரு பெருமை கிடையாது. இப்படத்தை தயாரித்தது, இயக்கியது, நடித்தது, வெளியிட்டது ஆகியவைதான் பெருமை. எல்லோரையும் போல் நானும் இப்படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காளி கோயிலில் தாயின் தலையை துண்டித்து நரபலி கொடுத்த மகன்..!!
Next post இலங்கையில் சிறுவர் தொழில் ஒழிக்கப்படுமா?..!! (கட்டுரை)