By 11 May 2017 0 Comments

12 வருடங்கள் கழித்து ஞானம் பெற்ற புத்தர் மீண்டும் மனைவியை சந்தித்தது ஏன்?..!!

625.147.560.350.160.300.053.800.264.160.90 (1)ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று உலகுக்கு போதித்த ஓர் புனிதர் கௌதம புத்தர். இவருடைய போதனைகளின் படியேதான் பௌத்த மதம் உருவாகியது.

பௌத்தம் மற்றும் புத்தர் என்றாலே சாந்தம், அமைதி என்பதனைத் தவிர வேறெதுவும் நினைவுக்கு வராது. இதுவே யதார்த்தம்.

ஆனால் இப்போதைய நிலையில் பௌத்தத்தை போதிப்பவர்கள் இடையே அமைதியும் சாந்தமும் உள்ளதா என்றால் அது மிகப்பெரிய சந்தேகத்தையும் வேடிக்கையையும் ஏற்படுத்திப் போகும்.

எவ்வாறாயினும், புத்த பெருமான் ஓர் புனிதர், சாந்தமே உருவானவர் என்பதற்கு அறிவாளிகள் எவரும் மாற்றுக் கருத்தினை வெளிப்படுத்துவது இல்லை.

ஆனாலும் கூட புத்தர் கடவுள் அல்ல. புத்தரைப் பின்பற்றுகின்றவர்கள் அவரிடம் வரம் கேட்பதில்லை, அதற்கு பதில் அமைதியை மட்டுமே எதிர்ப்பார்ப்பார்கள். பௌத்தர்கள் தியானத்தின் மறு உருவமாகவே கௌதமரைப் பார்க்கின்றனர்.

இவை அனைவருக்கும் தெரிந்த விடயமே. கௌதமர் பற்றிய குறிப்பிட்ட ஒரு விடயம் பலருக்கு தெரிவதும் இல்லை அவ்வளவு ஏன் குழப்பமும் கூட இந்த விடயம் இன்று வரை இருக்கின்றது.

விடயம் யாதெனின் கௌதம புத்தர் சித்தார்த்தனாக இருந்தபோது (இளமைப்பருவம்) யசோதராவை திருமணம் செய்தார்.

பின்னர் ஒரு மகனைப் பெற்றெடுத்து, தம் ஆசைப் புதல்வனுக்கு ராகுலன் எனும் பெயர் சூட்டி 13 வருடங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வந்தார்.

இப்படியான அவர்களின் மகிழ்ச்சியான இல்லற வாழ்வில் இடையில் சித்தார்த்தனுக்கு வாழ்க்கை பற்றிய யதார்த்தம் தெரியவந்தது அவரின் 29 ஆவது வயதில்.

அவரது 29ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் கிடைக்கப் பெற்றார். அதற்கு காரணமாய் அமைந்தது ஓர் நாள் அவர் சென்ற நகர்வலம்.

அப்போது, ஒரு வயதான தள்ளாடும் கிழவர், ஒரு நோயாளி, அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம், நான்காவதாக ஒரு முனிவன். இந்த நான்கு காட்சிகளையும் கண்ட சித்தார்த்தனின் வாழ்வு மாறிப் போனது.

இதனூடாக மனித வாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில் உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், வாழ்வின் ரகசியத்தைக் காண கானகம் நோக்கிப் பயணித்தார். அப்போது அவர் துறவறம் பூணவில்லை, மாறாக வாழ்வின் ரகசியத்தைக் காண்பதே அவரின் நோக்கமாக இருந்தது.

அதன் பின்னர் 12 வருடங்கள் கழித்து ஞானோதயத்தைப் பெற்றுக் கொண்டார். இந்த வரலாறு அனைத்தும் அனைவரும் அறிந்த விடயம். என்றாலும் இதில் புதைந்துள்ள முக்கிய கேள்வி என்னவென்றால்,

தனது 16ஆவது வயதில் மணம் முடித்த சித்தார்த்தன், 29 ஆவது வயதில் இல்லற வாழ்வை, மனைவியைத் துறந்து கானகம் சென்று விட்டார். தொடர்ந்து 12 வருடங்கள் யசோதராவை பிரிந்திருந்த அவர்.

கௌதம புத்தனாக மாரிய பின்னர் மீண்டும் யசோதராவைச் சந்திக்கச் சென்றுள்ளார். 12 வருடங்கள் கழித்து ஏன் அவ்வாறு சென்றார்? இதுவே அந்தக் கேள்வி.

அதற்கு பதில் இவ்வாறு அமைகின்றது.,

12 வருடங்கள் எங்கு தேடியும் புத்தரின் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கவில்லை. சூன்யமாகவே இருந்தன. கடைசியில் செய்வதறியாது ஒரு போதி மரத்தடியில் அமர்ந்து உணவு இன்றி தியானத்தில் அமர்ந்தார்.

தொடர்ந்து காற்றை மட்டுமே சுவாசித்து கடுந் தியானம் செய்யத் தொடங்கினார். இப்படியாக 49 நாட்கள் கழிந்த நிலையில் அவருக்கு ஞானோதயம் கிடைத்தது.

கௌதமர் ஞானமடைந்த பின்னர், அவர் தன் சீடர்களிடம் ‘நான் என் மனைவி யசோதாராவை பார்க்க விரும்புகிறேன், அவளுடன் பேச விரும்புகிறேன்’ என்றார்.

புத்தரின் இந்தக் கருத்து சீடர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது அதனால் “12 வருடங்களுக்கு பிறகு மனைவியிடம் தாங்கள் செல்ல வேண்டும் என்றால்? மக்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் எனக் கேட்கின்றனர்.

அதற்கு சாந்த கௌதமர் “ஞானோதைய நிலையை அடைவதற்கு நான் அவளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன், அதனால் அவளுக்கு நான் நன்றி தெரிவித்தாக வேண்டும்” எனக் கூறுகின்றார்.

அதன் பின்னர் 12 வருடங்கள் கழித்து மீண்டும் அரண்மனைக்கு வந்த புத்தர், யசோதராவைச் சந்திக்கின்றார். கோபமாக இருந்த அவளிடம் சாந்தமாக,

“தவறு செய்து விட்டேன் இப்போது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கின்றேன், அப்போது புரியாத நிலையில் செய்து விட்டேன்”

“இன்று புரிந்த நிலையில் இருக்கின்றேன். மன்னிப்புக் கேட்பதோடு என் அனுபத்தை உன்னோடு பகிர்ந்து கொள்கின்றேன் என்கின்றார் கௌதம புத்தர்.

அப்போது கௌதமரை யசோதரா உற்று நோக்க அவரின் தலைக்கு பின்னால், ஓர் ஒளிவட்டம் தெரிவதைக் கண்டுள்ளார், தன் கணவர் இது வல்ல என்பதனை உணர்ந்த அவர் தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும் படி புத்தரிடம் வேண்டினார்.

இவ்வாறாகவே புத்தர் 12 வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் யதோதராவை சந்தித்த கதை அமைகின்றது. ஆசையே துன்பத்திற்கு காரணம் எனக் கூறிய புத்தர் ஓர் புனிதனாக இன்றும் வாழ்கின்றார்.Post a Comment

Protected by WP Anti Spam