பூலித்தேவன் பிறந்தநாள்: கார்த்திக் பங்கேற்ற விழாவில் கல்வீச்சு-தடியடி

Read Time:4 Minute, 54 Second

Karthik.jpgநெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டுëசெவலில் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் மன்னன் பூலித்தேவன் பிறந்தநாள் விழா நேற்று இரவு நடந்தது. விழாவில் நடிகரும், பார்வர்டு பிளாக் கட்சி தலைவருமான கார்த்திக், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசு எம்.பி., மற்றும் விழா அமைப்பாளர் நடராஜன், மதுரை ஆதீனம் பால பிரஜாபதி அடிகளார் டைரக்டர் மனோஜ் குமார், இசை அமைப்பாளர் கங்கை அமரன், கோமதி முத்துராணி உள்பட தலைவர்கள் மேடை யில் அமர்ந்து இருந்தனர்.

அப்போது கார்த்திக் ரசிகர்கள் மேடை முன்பு நெருக்கி அடித்துக்கொண்டு வந்தனர். இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தினார்கள். உடனே நடிகர் கார்த்திக் எழுந்து `என் சகோதரர்களை அடிக்க வேண்டாம், அனைவரும் அமைதி தாருங்கள் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து கூட்டம் சற்று அமைதியானது. ஆனாலும் கூட்டம் நடக்கும் மேடைக்கு எதிரே உள்ள மரங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றில் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாக ஏறி இருந்தனர்.

இëந்த நிலையில் கூட்டம் தொடங்கி தலைவர்கள் ஒவ்வொருவராக பேசத் தொடங்கினார்கள். பால பிரஜாபதி அடிகளார் பேசும்போது, ரசிகர்கள் சீக்கிரம் கார்த்திக்கை பேச அனுமதியுங்கள் என்று கோஷமிட்டு மேடையை நோக்கி செருப்பை வீசினார்கள்.

அந்த செருப்பு பூலித்தேவனின் வாரிசான பஞ்சாயத்து தலைவி கோமதிமுத்துராணி அருகே விழுந்தது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக போலீசார் செருப்பு வந்த திசை நோக்கி சென்று கூட்டத்தில் மீண்டும் தடியடி நடத்தினார்கள். அதன்பிறகு தொடர்ந்து தலைவர்கள் பேசினார்கள்.

இரவு 9 மணி அளவில் மதுரை ஆதீனம் தனது இருக்கையில் அமர்ந்தபடி வாழ்த்திப்பேசினார். அப்போதும் ரசிகர்கள் கார்த்திக்கை பேசச் சொல்லி தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். அப்போது திடீர் என்று கூட்டத்தில் இருந்து மேடையை நோக்கி 2 கல் வேகமாக வந்தது. அதில் ஒரு கல் மேடை அருகே உள்ள மேஜையில் விழுந்தது. அடுத்த கல் பேசிக்கொண்டு இருந்த மதுரை ஆதீனத்தின் தலையில் விழுந்தது.

இதில் தலையில் ரத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று ரத்தத்தை துடைத்து அந்த இடத்தில் விபூதி வைத்தனர். உடனே மேடையில் இருந்த தலைவர்கள் மைக் முன்பு இந்த கூட்டத்தில் ஒரு வேண்டாத விஷமி புகுந்துள்ளான். அவனை அடித்து வெளியேற்றுங்கள் என்று கூறினர்.

இதனால் கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் கல்வந்த திசைக்கு சென்று மீண்டும் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். அதன்பிறகு ஏராளமான போலீசார் மேடை முன்பு குவிக்கப்பட்டனர். கூட்டத்தினர் நடுவேயும் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டனர். ëஅதன்பிறகு மதுரை ஆதீனம் தொடர்ந்து பேசினார்.

அதன்பிறகு திருநாவுக்கரசு எம்.பி. பேசும்போது கூட்டத்தில் சிலர் கோஷம் போட்டு கத்தினார்கள். உடனே திரு நாவுக்கரசு எம்.பி. தனது பேச்சை நிறுத்தி, ரசிகர்களை பார்த்து கடும் எச்சரிக்கை விடுத்தார். உடனே கூட்டம் கப்சிப் ஆனது.

அதன்பிறகு நடிகர் கார்த்திக் பேசும் போது என் மீது கல்வீச மாட்டீர்களே என்று கூறிவிட்டு பேசினார். இந்த சம்பவத்தால் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘ரிஎம்விபி”யிடம் சரணடைந்த மேலும் ஆறு வன்னிப்புலிகள் சர்வதேச பிரதிநிதிகளிடம் கையளிப்பு
Next post இலங்கை கடற்படையுடன் கடும் போர் 80 விடுதலைப்புலிகள் பலி