By 20 May 2017 0 Comments

சூட்கேஸில் கள்ளக்காதலி பிணத்துடன் பிரித்தானியாவை வலம்வந்த நபர்..!! (வீடியோ)

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவன் கள்ளக்காதலியை கொன்று சூட்கேஸில் அடைத்து சாலையில் சுற்றித்திரிந்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

42 வயதான Kostadin Kostov என்ற நபரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

Kostadin Kostovவின் கள்ளக்காதலியான Gergana Prodanova’s தவறான உறவுக்கு வராத கோபத்தில் அவரை கொன்று நிர்வாணப்படுத்தி உடலை சூட்கேஸில் அடைத்துள்ளார்.

பின்னர், அந்த சூட்கேஸூடன் சாலையில் சுற்றித்திரிந்த நிலையில் இறுதியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகே புதைத்துள்ளார்.

பிணத்தை கண்டெடுத்த பொலிசார் கொலைக்கான காரணத்தை கண்டறிந்து குற்றவாளியான Kostadin Kostovவையும் கைது செய்துள்ளனர்.

அவர் Exeter நகர சாலையில் சூட்கேஸ் உடன் சென்ற சிசிடிவி காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பல்கேரியாவில் பிறந்த Kostov பிரித்தானியாவில் துப்புரவாளராக பணியாற்றி வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது..

குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட Kostadin Kostovவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் 19 ஆண்டுகளுக்கு பிறகே அவரால் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam