By 22 May 2017 0 Comments

சங்கு சக்கரத்திற்கு கிடைத்த ‘யு’ சான்றிதழ்..!!

201705221622400926_Sangu-Chakkaram-gets-U-certificate_SECVPFபிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் முக்கிய வேடத்தில் நடித்துவரும் புதிய படம் ‘சங்கு சக்கரம்’. இப்படத்தை மாரீசன் என்பவர் இயக்கியுள்ளார். இவருடன் கீதா, ஜெர்மி ரோஸ், ராக்கி, ‘பசங்க-2’ நிஷேஷ் மற்றும் 8 குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

கேலி, கிண்டல், நையாண்டி, கலந்த இப்படத்துக்காக திலீப் சுப்புராயன் ஒரு வருடமாக முடி வளர்த்து நடித்துள்ளார். இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், சான்றிதழ் வாங்குவதற்காக தணிக்கை குழுவினருக்கு இப்படம் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும், படக்குழுவினரையும் பாராட்டியுள்ளனர். ‘யு’ சான்றிதழ், தணிக்கை குழுவினரின் பாராட்டு இரண்டும் படக்குழுவினரை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஜி.ரவிகண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லியோ விஷன்ஸ், சினிமா வாலா பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை வருகிற ஜுன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam