செய்தி வாசிப்பில் குறுக்கிட்ட லேப்ரடார் நாய்: வைரலாகும் வீடியோ..!!
Read Time:1 Minute, 25 Second
ரஷ்யாவில் செய்தியாளர் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது, நாய் திடீரென்று உள்ள வந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் செய்தியை வாசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று அங்கு நாயின் குரல் ஒலித்தது.
பின்புறத்திலிருந்து எழும்பி மேஜையில் ஏற முயன்ற அந்த லேப்ரடார் வகை நாயை பெரிதுபடுத்தாமல், செய்தியாளர் தொடர முயன்றாலும், தொலைக்காட்சியில் தோன்ற விரும்பிய அந்த நாயை தடுக்க முடியாமல் கிட்டத்தட்ட 15 விநாடிகளுக்கு தடுமாறினார்.
பின்பு செய்தியாளர் அதைச் சமாளித்த நிகழ்வை அந்த தொலைக்காட்சியின் யூடியுப் பக்கத்தில் பதிவேற்ற, இதுவரை 30 லட்சம் பேர் அந்த வீடியோவைப் பார்த்துள்ளனர். மேலும் அந்த செய்தியாளர் தனக்கு நாயை விட பூனை தான் அதிகம் பிடிக்கும் என கூறியிருந்தார்.
Average Rating