By 28 May 2017 0 Comments

இது தெய்வீக காதல்: மரணபடுக்கையில் காதலியை திருமணம் செய்த காதலன்..!!

625.0.560.350.160.300.053.800.668.160.90அமெரிக்காவில் புற்றுநோயால் மரணப்படுக்கையில் இருக்கும் காதலியை காதலன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தை சேர்ந்தவர் ரொண்டா பெவன்ஸ் (28), இவர் தனது சிறுவயது நண்பரான மாட் மகெர் என்பவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் ரொண்டாவுக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனது, பரிசோதித்து பார்த்ததில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

அவரின் நோய் சரியாகி விடும் என அவர் உறவினர்கள் நினைத்திருந்த நேரத்தில், அது கடுமையடைந்து ரொண்டா கடந்த வாரம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

மேலும் ரொண்டா இனி பிழைக்க வாய்ப்பில்லை எனவும், சில நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் எனவும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதையடுத்து ரொண்டாவின் கடைசி ஆசையை தெரிந்து கொண்ட அவரின் தோழி, காதலனுடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

ரொண்டாவை அவரின் வீட்டுக்கு அழைத்து சென்று, மத போதகர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் ரொண்டாவின் மூக்கில் டியூப் மாட்டப்பட்டு அவர் படுத்திருந்த நிலையில் அவருக்கும் மகெருக்கும் திருமணம் நடைப்பெற்றது.

திருமணம் நடந்ததும் ரொண்டாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.

ரொண்டா இன்னும் எத்தனை நாள் உயிரோடிருப்பார் என்று தெரியாது. ஆனால், அவளுக்கு அழகான விழிகள் உள்ளன என்று கண்ணீருடன் மாட் மகெர் கூறியுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam