மலச்சிக்கலை முற்றிலும் குணப்படுத்தும் கீரை..!!

Read Time:2 Minute, 27 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)அன்றாடம் நாம் சாப்பிடும் உணவில் அதிகமாக பயன்படுத்தும் காரம், புளிப்பு, போன்றவை செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தி, வயிற்றில் புண்கள், குடல் வாதம், மலச்சிக்கல் மற்றும் மூலநோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

மூலநோயை தடுப்பது எப்படி?

அடிக்கடி அசைவ உணவு, காரம், மசாலா மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு வகைகள் சாப்பிடுவதை குறைத்து, நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

மூலநோயை குணப்படுத்தும் கீரை எது?

பசுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு கீரை வகையாகும்.

மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் ஆகிய அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை.

துத்திக் கீரையின் இலைகள் இதய வடிவில் இருக்கும். இந்த கீரை மூலநோயை குணப்படுத்த பயன்படுகிறது.

மூலநோயை குணப்படுத்த துத்திக் கீரையை பயன்படுத்துவது எப்படி?

துத்தி இலைகளை நன்கு கழுவி, அதை துவரம் பருப்புடன் சேர்த்து வேகவைத்து தினமும் மதியம் வேளை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.
துத்தி இலையை அரைத்து, தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு நெல்லி காய் அளவு விழுங்கி விட்டு, ஒரு டம்ளர் மோர் குடிக்க வேண்டும்.
துத்தி இலையை விளக்கெண்ணையில் வதக்கி சூடு ஆறியதும் அதை ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை வைத்து கட்டிக்கொண்டு இரவு உறங்க வேண்டும்.
குறிப்பு

இந்த வழிமுறைகளை பின்பற்றும் போது, காரமான உணவு தவிர்த்து, வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்து வர வேண்டும். மேலும் இதனை தொடர்ந்து 40 நாட்கள் செய்து வந்தால் மூலநோய் குணமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓவியாவின் திடீர் ஹேர்ஸ்டைல் மாற்றம்… பின்னனியில் இருக்கும் கலங்க வைக்கும் காரணம்?..!!
Next post மலைப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள அழகான திரையரங்கம்..!!