சிவப்பு உதட்டை பெற அற்புத வழி..!!
இயற்கையான வழியில் உதடுகளின் சிவப்பு நிறத்தை நிரந்தரமாக்கி, உதட்டின் அழகை அதிகரிக்க, சூப்பரான டிப்ஸ் இதோ
காஃபி
காஃபியிலுள்ள காஃபின் இறந்த செல்களை அகற்றி செல்களுக்கு புத்துயிர் அளித்து, ரத்த ஓட்டம் அதிகரிக்கச் செய்கிறது.
எனவே காபிப் பொடியை ஆலிவ் எண்ணெய்யில் கலந்து தினமும் உதட்டில் தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
குங்குமப் பூ
குங்குமப்பூ துகளை சிறிது பாலில் போட்டு 15 நிமிடம் ஊறவைத்து, பின் அந்த பாலில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து, அதனை உதட்டில் தேய்த்து வர வேண்டும்.
புதினா
புதினாவை அரைத்து அதனுடன் சிறிது சர்க்கரையை கலந்து, இந்த கலவையை தினமும் உதட்டில் தேய்த்து, காய்ந்ததும் கழுவி வர வேண்டும்.
கடல் உப்பு
தேங்காய் எண்ணெயில் சிறிது கடல் உப்பு கலந்து, அதை உதட்டில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவி வர வேண்டும்.
தேன்
தேன், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து உதட்டில் தேய்த்து வந்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
Average Rating