மலச்சிக்கல், வறட்டு இருமல் பிரச்சனைக்கு ஓரே தீர்வு..!!

Read Time:2 Minute, 43 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)அதிகமான ஸ்டார்ச் மற்றும் குறைந்த நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது போன்ற தவறான உணவுப் பழக்கமுறையினால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அதுவே வறட்டு இருமல் பிரச்சனையானது, நமது சுவாசப் பாதையில் ஏற்படும் தொற்றுக்கள், காலநிலை மாற்றம், தூசுக்களின் அழற்சி, செல்லப் பிராணிகளால் ஏற்படும் அழற்சி காரணமாக ஏற்படுகிறது.

எனவே உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் இவ்விரு பிரச்சனைகளையும் குணப்படுத்த, ஆயுர்வேதத்தில் ஒரே தீர்வு உள்ளது.

தேவையான பொருட்கள்

சூடான நெய் – 1 டேபிள் ஸ்பூன்
சுடு தண்ணீர் – 1 டம்ளர்
பயன்படுத்தும் முறை

தினமும் காலையில் உணவு சாப்பிடுவதற்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் சூடான நெய்யை சாப்பிட்டு, உடனே 1 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும், இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.

இந்த முறையை இரவில் உறங்குவதற்கு முன் செய்தால் வறட்டு இருமல் பிரச்சனைகள் ஏற்படாது.

மேலும் இந்த ஆயுர்வேத முறையை பின்பற்றுவதுடன் மட்டுமல்லாமல், நல்ல உணவுப் பழக்கம், அதிகமான நீர் குடித்தல், உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் இந்த முறையை மேற்கொள்ளும் போது, குளிர் பானங்கள், எண்ணெய் உணவுகள் சாப்பிடுவது மற்றும் மாசு நிறைந்த சூழலில் சுவாசிப்பது போன்ற பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நெய் மலச்சிக்கல் மற்றும் இருமல் பிரச்சனையை எப்படி குணமாக்குகிறது?

ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் நெய் ஒரு இயற்கையான மலமிளக்கி. இது குடலின் சீரண சக்தியை அதிகரித்து, நச்சுக்களை வெளியேற்றி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்க உதவுகிறது.
நெய்யை சூடாக்குவதால், அது ஒரு அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்பட்டு, வறட்டு இருமல் மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்குகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதாநாயகியாக அறிமுகமாகும் ரகுமானின் மகள்! இவருக்கு இவ்வளவு பெரிய பெண்ணா?..!!
Next post ஒரு முத்தத்தின் விலை ரூபாய் 30 ஆயிரம்..!!