`மெர்சல்’ படத்தில் விஜய்யின் மற்றொரு கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியானது..!!

Read Time:3 Minute, 26 Second

201706220905343288_Role-of-Vijay-in-Mersal-revealed-by-2nd-look-poster_SECVPFஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61-வது படத்திற்கு `மெர்சல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாகவே `மெர்சல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. `மெர்சல்’ போஸ்டரில், பாய்ந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளைகளுக்கு நடுவே விஜய் முறுக்கு மீசையுடன் `மெர்சல்’ லுக்கில் நிற்பது போல அந்த போஸ்டர் இருந்தது.

மேலும் `மெர்சல்’ என்ற தலைப்பின் முதல் எழுத்து ஜல்லிக்கட்டு காளையின் கொம்பில் ஆரம்பித்து வாலில் முடிவது போல அதன் லோகோ இருக்கிறது. படத்தில் ஜல்லிக்கட்டுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை தலைப்பு மற்றும் போஸ்டரை பார்க்கும் போதே தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளான இன்று `மெர்சல்’ படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியானது. அதில் விஜய் ஒரு சிவப்பு நிற கோட்டுடன் சீட்டுக்கட்டுகளை சிதற விடுகிறார். அவரது பின்னணியில் ஒரு கவர்ச்சிகரமான மாயை இருப்பது போல அந்த போஸ்டர் இருக்கிறது. மேலும் அந்த போஸ்டரில் விஜய்யின் கண்களை உற்று கவனிக்கும் போது, அவரது கண்களில் ஒரு ஈர்ப்பு இருப்பதும் தெரிகிறது. இதிலிருந்து படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் விஜய் ஒரு ஒரு மேஜிக் கலைஞர் என்பதை ஊகிக்க முடிகிறது.

விஜய் நடிக்கும் மூன்று கதாபாத்திரங்களில் ஒன்று ஊர் தலைவர், மற்றொன்று மருத்துவர் என்பதை நாம் முன்னதாகவே பார்த்திருந்தோம். விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்னவென்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், போஸ்டரின் மூலமாக அந்த கதாபாத்திரம் குறித்த தகவலும் தற்போது உறுதியாகியுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, சத்யன், ஹரீஷ் பேரடி, யோகி பாபு, கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு `இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

`மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?..!!
Next post யாருக்கெல்லாம் குடல் புற்றுநோய் வரும்..!!