‘மனிதன் பாதி; மிருகம் பாதி’ உருவத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியால் பதறும் கிராமவாசிகள்..!!

Read Time:2 Minute, 21 Second

201706222125420874_animal003-s._L_styvpfதென்ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமம் லேடி ஃப்ரேர். இந்த கிராமத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இங்கு வசித்து வந்த விவசாயின் ஆடு ஒரு குட்டி ஈன்றது. இறந்தே பிறந்த இந்த குட்டி மண்ணில் விழுந்ததும், பார்த்த அனைவரும் மிகுந்த அச்சத்தில் உறைந்தனர்.

ஏனெனில் அந்த குட்டி பாதி மனித உருவத்திலும், பாதி மிருகம் உருவத்திலும் காட்சியளித்தது. அந்த கிராமத்தில் உள்ளவர்கள் மிகவும் பிற்போக்குவாதிகள். அவர்கள் மூடநம்பிக்கைகளை அதிக அளவில் நம்பக்கூடியவர்கள். இந்த ஆட்டுக்குட்டியை பார்த்ததும், இது சாத்தானால் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் இந்த கிராமத்திற்கு பெரிய ஆபத்து வரப்போகிறது என்று அச்சம் அடைந்தனர். இந்த செய்தி கிராமம் முழுவதும் தீயாக பரவியது.

இதனால் உஷார் அடைந்த அரசு, அந்த படம் உண்மைதானா?, வதந்திக்காக பரப்பப்பட்டதா? என அறிய கிழக்கு கேப் கிராம வளர்ச்சி துறை வல்லுனர்களை அந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அந்த கிராமத்திற்கு சென்ற வல்லுனர்கள் அது உண்மையான படம்தான் என்று உறுதி செய்தனர். பின்னர், ஆட்டுக்குட்டி அப்படி பிறப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிய முற்பட்டனர்.

அப்போது அந்த குட்டியை ஈன்றிய ஆடு ஒருவகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் குறைமாதமாக பிறந்த கன்று அப்படி தோற்றமளித்துள்ளது என்று அந்த குழுவின் டாக்டர் லுபாபாலோ தெரிவித்துள்ளார்.

மேலும், அதன் உடலை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்து மக்கள் நம்பவைக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவனின் டூத் பிரஷ்சால் கழிவறையை சுத்தம் செய்த மனைவி.. வினோத முறையில் கொலை செய்த கணவர்..!!
Next post சிம்புவின் `ஏஏஏ’ படக்காட்சிகள் ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்..!!