By 29 June 2017 0 Comments

4 நாடுகள் 22 நாட்கள்: பிரம்மாண்டம் கூட்டும் ‘துருவ நட்சத்திரம்..!!

201706291511486298_Four-Countries-twenty-two-days-Dhurava-Natchathiram-shooting_SECVPFவிக்ரம்-கவுதம் மேனன் கூட்டணியில் ‘துருவ நட்சத்திரம்’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 22 நாட்கள் 4 நாடுகளில் இந்த படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம்.

பல்கேரியா, ஸ்லோவேனியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான அபுதாபி ஆகியவற்றில் நடைபெறவிருக்கிறதாம். ஏற்கெனவே, இப்படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்த முக்கியமான 12 கதாபாத்திரங்களையும் உள்ளடக்கிய காட்சிகள் இந்த படப்பிடிப்பில் படமாக்கவுள்ளார்களாம்.

இந்த படத்தில் 12 கதாபாத்திரங்களையும் தற்போதுதான் முதன்முறையாக படமாக்கவிருக்கிறார்களாம். பல்கேரியாவில் விக்ரம் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்ரன், ராதிகா, சதீஷ், வம்சி, திவ்யதர்ஷினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam