கத்தி காட்டி மிரட்டிய நபர்… கட்டிபிடி வைத்தியத்தால் சமாதானம்! இந்த வீடியோவை பாருங்கள்..!!

Read Time:2 Minute, 55 Second

police001.w245காவல்துறை அதிகாரி ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரிடம் சமாதானம் பேசி கட்டிப்பிடித்து கத்தியை கைப்பற்றியுள்ளார்.

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காங்கில் உள்ள ஹுவாயி கவாங் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நபர் கையில் கத்தியுடன் நுழைந்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.

அந்த போலீஸ் நிலையத்திலிருந்த அனிருத் மலே என்ற போலீஸ் அதிகாரி தனது இரு கைகளையும் நீட்டியவாறு அழைத்தார். அந்த நபர் யோசிக்கவே, பின் கூலாக பேசினார். அனிருத் பேச பேச கத்தியுடன் வந்த நபர் அழத் தொடங்கி விட்டார்.

அனிருத் ஒரு கட்டத்தில் அவரது கையிலிருக்கும் கத்தியை தன்னிடம் வழங்குமாறு கூறினார். உடனே அவர், அனிருத் மீது நம்பிக்கை வைத்து அந்தக் கத்தியை அனிருத்திடம் வழங்கி தனது இரு கைகளையும் தூக்கி சரணடைந்து அழுதுள்ளார்.

பின் அவரை கைது செய்யாமல் கட்டிப்பிடித்துக் கொண்டு சமாதானப்படுத்தி, அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து அந்த போலிஸ் அதிகாரி கூறியதாவது, நான் அந்த நபரிடம் பேச்சு கொடுத்த போது, நான் ஒரு முன்னாள் இசைக் கலைஞர். ரது கிட்டார் இசை கருவி திருடு போய்விட்டதால், நான் மன அழுத்தத்தில் உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

அவரது நிலையை அறிந்து கொண்டு என்னிடம் கிட்டார் ஒன்று உள்ளது அதை அளிக்கிறேன், கத்தியை என்னிடம் தாருங்கள் என்று கூறினேன். அவரும் என் மீது நம்பிக்கை கொண்டு கத்தியை அளித்து விட்டார் என்று கூறியுள்ளார்.

இந்தக் காட்சி அந்த போலீஸ் நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால், இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களிலும், இணையதளங்களிலும் வைரலாகி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும், போலிஸ் அதிகாரி அனிருத்தின் இந்த மனிதாபிமானச் செயலுக்கு பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கேளிக்கை வரி அழித்துவிடும்: இயக்குனர் சித்ரா லட்சுமணன் கருத்து..!!
Next post மொட்டையடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல ஹிரோயின்..!!