இசைக் கச்சேரி மேடையில் நாய் செய்த செயல்: வைரல் வீடியோ..!!
Read Time:1 Minute, 7 Second
துருக்கியில் இசைக் கச்சேரி நடைபெற்ற மேடையில் நாய் ஒன்று நடந்து சென்ற வீடியோ தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.
துருக்கியில் வியன்னா என்ற ஆர்கெஸ்ட்ரா குழுவின் சார்பாக இசைக் கச்சேரி நடைபெற்றது. அந்த இசைக் கச்சேரியை ஏராளமானோர் பார்த்துக்கொண்டிருந்தனர். 50-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் வயலின் வாசித்துக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் நாய் ஒன்று மேடையில் ஏறிச் சென்றது.
பின்னர், ஒரு சில விநாடிகள் அங்குமிங்கும் பார்த்த அந்த நாய், இசைக் கலைஞர் ஒருவருக்கு அருகில் படுத்துக் கொண்டது. இதைப் பார்த்த பார்வையாளர்கள் சிரித்து மகிழ்ந்தனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Average Rating