By 10 August 2017 0 Comments

கமலுக்கே தெரியாமல் பிக் பாஸ் எடுத்து காண்பித்த ப(பா)டம் இது… சீக்கிரம் படிங்க..!!!

625.500.560.350.160.300.053.800.900.160.90ஒவ்வொரு மனிதனும் ஒரு பாட புத்தகம், நீ எத்தனை அதிகம் படிக்கிறாயோ, அத்தனை உயரம் செல்லலாம் என்பது சான்றோர் கூற்று. ஒருசிலரிடம் இருந்து நல்லவையும், ஒருசிலரிடம் இருந்து கெட்டவையும் வெளிப்படும். நல்லதை கற்றுக் கொள்ளுங்கள், கெட்டதை தூர ஒதுக்குங்கள்.

பிக் பாஸ் என்பது ஒரு சமூகத்தின் சிறிய மாதிரி வடிவமைப்பு என்ற கண்ணோட்டத்தில் கண்டோமானால், அது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை தாண்டி, மக்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த பாட புத்தகமாக இருக்கும்.

ஆம்! நம்மை சுற்றி இருப்பவர்கள் நம் முன்னே, நம் பின்னே எப்படி பேசுவார்கள், ஒரு சூழலில் நாம் செய்த காரியத்தை எப்படி எல்லாம் சுட்டிக் காட்டுவார்கள் என்பதை நமக்கு படம்பிடித்து காண்பிக்கும் டிஜிட்டல் பாடம் தான் பிக் பாஸ்…

ஸ்ரீ!

சில வாய்ப்புகள் மீண்டும், மீண்டும் நம்மை தேடி வராது. முதல் முறை வரும் போதே அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், பின்னர் வருந்தியும் பயனில்லை.

ஹாரத்தி!

கர்மா ஒரு பூமுராங் போன்றது என்பது உலக புகழ்பெற்ற பழமொழி. நாம் இன்று ஒருவருக்கு செய்யும் வினை, பின்னாளில் நம்மை கண்டிப்பாக வந்து சேரும். சில சூழல்கள், சில தருணங்களில் நாம் நல்லது என்று நினைத்து செய்பவை கூட தவறாக போய் முடியலாம்.

கஞ்சா கருப்பு!

மற்றவரை பழி கூறிக் கொண்டே இருப்பது ஒருநாள் நீங்கள் அனைவரின் முன்னிலையில் வருந்தும் நிலையை கொண்டு வந்து சேர்க்கும். கோபத்தை அடக்க தெரியாதவனால் எதையும் தலைமை ஏற்று சிறப்பாக செய்திட முடியாது.

பரணி!

மற்றவர் நம்மை தவறாக நினைக்கிறார்கள் என்பதற்காக நாம் மன்னிப்பு கேட்க கூடாது.மற்றவரது பார்வை கூட தவறாக இருக்கக்கூடும். அவர்களது பார்வை குறைபாட்டிற்கு நாம் பலியாடாகிவிடக் கூடாது.

நமிதா!

சுத்தம் சோறு போடும். நம்மையும், நம்மை சுற்றியிருக்கும் இடத்தையும் சுகாதராமாக வைத்துக் கொண்டால் தான் ஆரோக்கியம் மேம்படும்.

ஜூலியானா!

பொய், நம்பிக்கை துரோகம், சுயநலத்திற்காக, மக்களை சம்பாதிக்க மற்றவர் மீது பழிபோட்டு பேசுவது போன்றவை ஒருநாள் உங்களை வெளியே தலைகாட்ட முடியாத சூழலை உருவாக்கலாம்.

காயத்திரி!

நாம் வென்று மற்றவரை தோற்கடிப்பதற்கும், மற்றவரை தோற்கடித்து நாம் வெல்வதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. மற்றவரை கீழே இழுத்துவிடுவதால் நாம் மேலே சென்றுவிட முடியாது என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஷக்தி!

காலி பாத்திரம் தான் நிறைய சத்தம் எழுப்பும். கற்றவர்கள், பண்பானவர்கள் எப்போதும் சத்தம் போட்டு பேசமாட்டார்கள். ஓரிரு விஷயம் அரைகுறையாக கற்றவர் மட்டுமே தங்களை ஞானியாக காட்டிக் கொள்ள ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆரவ்!

நம்மை விரும்பும் நபர்களின் இதயத்தை உடைப்பதும் மனிதத்தன்மையற்ற செயல் தான். உலகிலேயே விலைமதிப்பற்றது ஒன்று தான், அன்பு! அன்பை தட்டிக்கழிப்பதும், வெட்டி முறிப்பதும் ஒருவரை மிகவும் நோகடிக்கும்.

சிநேகன்!

எத்தனை பெரிய சோகமாக இருந்தாலும், ஒரு சிறு அணைப்பு ஆற்றிவிடும். மனிதன் கண்டுபிடித்த மாபெரும் மருந்து கட்டிப்பிடி வைத்தியம்.

கணேஷ்!

நல்ல உணவே நல்ல மருந்து. உணவில் கவனம் செலுத்தினால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தேவையில்லை. சீரான உடற்பயிற்சி, சீரான யோகா போன்றவை உடலை திடகாத்திரமாக வைத்துக் கொள்ள உதவும்.

ரைசா!

முகத்தின் அழகை விட, அகத்தின் அழகே முக்கியமானது. ஒரு நாள் மேக்கப் கலைந்துவிட்டால் சுயரூபம் அகப்பட்டுவிடும். எனவே, முடிந்த வரை அகத்திற்கு மேக்கப் போட வேண்டாம். உண்மை மனம் ஒருநாள் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்படும், பாராட்டப்படும்.

வையாபுரி!

நல்ல மனம் எங்கே இருக்கிறதோ, அதுவே சிறந்த வீட்டின் அடையாளம். ஒருவருக்கு மட்டும் நல்ல மனம் இருந்து மற்றவர் எல்லாம் பித்துப்பிடித்த திருந்தால் அது வீடல்ல, மனநல காப்பகம்.

ஓவியா!

நீ, நீயாக இரு… எந்த சூழலுக்காகவும், நிகழ்வுக்காகவும் தன்னிலை இழக்காதே… உன் உண்மை நிலைக் கண்டு ஒருசில வெறுத்தாலும், ஒருநாள் நாடே உன்னை கொண்டாடும்.

கமல்!

நாம் என்ன செய்தாலும், அதை எல்லாம் மேலே இருந்து ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கான். நாம் செய்யும், நல்லவை, தீயவை கணக்கு வைக்கப்பட்டு வருகிறது என்பதை முதலில் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.Post a Comment

Protected by WP Anti Spam