ஒரே படத்தில் ஐக்கியமான சிம்பு, விஜய் சேதுபதி..!!

Read Time:1 Minute, 54 Second

201708101252442698_STR-and-Vijay-Sethupathi-in-the-same-film_SECVPFவிஷ்ணு விஷால் தற்போது `கதாநாயகன்’, `பொன் ஒன்று கண்டேன்’, `சிலுக்குவார்பட்டி சிங்கம்’, `மின்மினி’, `ராட்சசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – கேத்தரின் தெரசா இணைந்து நடித்திருக்கும் படம் `கதாநாயகன்’. சூரி, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. விஜய் சேதுபதியும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே சிம்பு இப்படத்தில் தொடக்கமும் நானே, முடிவும் நானே என்ற வகையில், அவரது குரலை கொடுத்திருக்கிறார். அதாவது, `கதாநாயகன்’ படத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் சிம்பு அவரது குரலில் பேசியிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். ஷான் ரோல்டன் இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக விஷ்ணு விஷால் தயாரித்திருக்கிறார்.

ஏற்கனவே `இடம் பொருள் ஏவல்’ படத்தில் விஷ்ணு விஷால் – விஜய் சேதுபதி ஒன்றாக நடித்திருந்தனர். சில காரணங்களால் அந்த படம் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடேங்கப்பா! இது ஓவியா தானா: ரசிகர்களுடன் ஜாலியாக பைக்கில் ட்ரிபிள்ஸ் அடித்த ஓவியா..!! (வீடியோ)
Next post வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்த நாய் : நாயின் குரைப்பை பார்த்து பயந்து நின்ற நல்லபாம்பு…!! (வீடியோ)