மெர்சல் படத்தில் வேறென்ன ஸ்பெஷல் இருக்கிறது தெரியுமா?..!!
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் மெர்சல் உருவாகி வருகிறது. இதில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது. இப்பாடலை பாடியுள்ள சத்ய பிரகாஷ் இது பேசியுள்ளார்.
இதில் அவர் இப்பாடலில் தமிழர்களை உற்சாகப்படுத்தும் வரிகள் உள்ளது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கிய சிறப்பிற்காகவே ஒரு சில வரிகள் இப்பாடலில் உள்ளது.
மேலும் இப்படத்தில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் பாடல் உள்ளது. இது ஒரு டூயட் பாடல். விஜய் சாரின் டேன்ஸ்க்காகவே இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது சொன்னார்கள்.
இன்னும் ஸ்பெஷல் இருக்கும். ஆனால் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால் சொல்ல முடியாது என சத்யா கூறினார்.