பிக்பாஸ் வீட்டிற்குள் சிவகார்த்திகேயன்?..!!
தமிழகத்தின் சமீபத்திய ஹாட் ஆஃப் த டாபிக் ‘பிக் பாஸ்’ தான். கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாலோ என்னவோ, அலுவலகம், டீக் கடை, சமூக வலைதளம் என எங்கும் எதிலும் ‘பிக் பாஸ்’ டாபிக்தான் அதிகம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் ஒருநாள் மட்டும் சிவகார்த்திகேயன் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதற்குக் காரணமும் இருக்கிறது. சிவகாத்திகேயன் மற்றும் நயன்தாரா நடித்திருக்கும் படம், ‘வேலைக்காரன்’. இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை விஜய் டி.வி பல கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத்தான், ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் சிவா செல்லயிருப்பதாகச் சொல்கிறார்கள்.