`மெர்சல்’ படத்துடன் இணையும் `ஹரஹர மகாதேவகி’..!!

Read Time:2 Minute, 10 Second

201708161201121185_The-Connection-Between-Vijays-Mersal-And-Hara-Hara_SECVPFஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக தளபதி விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படம் உருவாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் மூன்று கெட்-அப்களில் விஜய் நடித்து வருவதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

அதேநேரத்தில் பிரபுதேவா – ஹன்சிகா நடிப்பில் `குலேபகாவாலி’ படமும் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கவுதம் கார்த்திக் – நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி வரும் `ஹரஹர மகாதேவகி’ படமும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தில் சதீஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, பால சரவணன், ஆர்.கே.சுரேஷ், மயில்சாமி, நமோ நாராயணா மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில் நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றம் புதுமுக நடிகர் சந்திரன் நடிப்பில் `சொல்லிவிடவா’ படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஹிந்தவுடன் சேர்ந்தியங்க சம்பந்தன் ஆர்வமா?..!! (கட்டுரை)
Next post 100 வருட பொம்மையால் வீட்டில் நடந்த அமானுஷ்ய நிகழ்வுகள்: வைரல் வீடியோ..!!