உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான ‘கலோரி’..!!

Read Time:2 Minute, 52 Second

201708201305374094_calorie-increased-body-weight_SECVPFவிரைவாக உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ‘கலோரி’ விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் உள்ள கலோரிகளுக்கும் உடல் எடைக்கும் தொடர்பு உள்ளது.

உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக கலோரியை தவிர வேறு காரணங்களும் உள்ளன. குறைவான கலோரிகளை எடுத்துக்கொண்டாலும்கூட, அது உடல் எடையை குறைப்பதற்கு மாறாக அதிகரித்து, நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடும்.

எனவே அன்றாட உணவில் சராசரியான கலோரிகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். கலோரி என்பது உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல். இந்த ஆற்றலைக் கொண்டுதான் உடல் உறுப்புகளின் சக்தியும், அவற்றின் செயல்பாடுகளும் அமையும்.

தினசரி போதுமான கலோரிகளை நாம் பெறவில்லை என்றால், மிகுந்த சோர்வு, தலைவலி, உடல் உபாதைகள் ஏற்படும். அதேபோல அதிகமான கலோரி உணவுகள் அல்லது குறைந்த அளவு கலோரி உணவுகளை எடுக்கும்போது, ஆற்றல் செலவழியாமல் உடலில் கொழுப்பாக மாறி, செல்களில் தங்கி உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

நாம் அன்றாட செயல்களைச் செய்வதற்கு கலோரிகள் மிகவும் தேவை. ஒரு நாளைக்கான கலோரியின் அளவானது ஒருவரின் வயது, பாலினம் மற்றும் உடற்செயல்கள் போன்றவற்றைப் பொறுத்தது. 19 முதல் 30 வயதுடைய ஓர் ஆண் ஒரு நாளைக்கு சுறுசுறுப்பாக அனைத்துச் செயல்களையும் செய்ய 2600 முதல் 2800 கலோரிகள் தேவைப்படுகின்றன.

19 முதல் 30 வயதுடைய ஒரு சுறுசுறுப்பான பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 2000 முதல் 2200 கலோரிகள் வரை தேவைப்படுகிறது. நீங்கள் உடல் எடையை விரைவாகக் குறைக்க நினைத்தால், இங்கே குறிப்பிட்டுள்ள ஒரு நாளைக்குத் தேவையான உங்கள் கலோரிகளில் இருந்து 500 கலோரிகளை கழித்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, உடல் எடையை குறைக்க விரும்பும் ஓர் ஆணின் ஒரு நாளைக்கான கலோரிகள் 2000, ஒரு பெண்ணுக்கான கலோரிகள் 1500 ஆக இருக்கும். அதற்கேற்ப நம் உணவு முறையை அமைத்துக்கொண்டால், உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிரைவர் செய்த காரியத்தால் ஷாக்கான வரலட்சுமி..!!
Next post இணையத்தில் வைரலாகும் முதியவரின் செயல்… மிரள வைக்கும் காட்சி..!! (வீடியோ)