வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பாலை சேமிப்பது எப்படி?..!!

Read Time:3 Minute, 57 Second

201708091221140745_working-women-Breastfeeding-Storage-Guidelines_SECVPFகுழந்தை பிறந்து மூன்று மாதமோ அல்லது ஆறு மாதங்களோ கழித்து வேலைக்குச் செல்லும் பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் தவிப்பார்கள். சிலர் குழந்தைக்கு தேவையான பாலை எடுத்து வைப்பதும் உண்டு. தாய்ப்பாலை சேமித்து வைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

தாய்ப்பால் சிறிய கண்டய்னரில் எடுப்பதற்கு முன்னதாக கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். அதே போல பால் சேமிக்கும் கண்டய்னரும் சுத்தமாக இருக்க வேண்டும். சாதாரண ப்ளாஸ்டிக் பாட்டிலில் சேமிப்பதை தவிர்க்கவும்.

குழந்தையை டே கேரில் விடுபவராக இருந்தால் நீங்கள் எடுத்துக் கொடுக்கும் பாலில் உங்கள் குழந்தையின் பெயர் அன்றைய தேதி எழுதிக் கொடுக்கவும்.

நீங்கள் எடுத்துக் கொடுத்தப்பால் சிறிதளவு மீதம் இருந்தால் அதிலேயே ஃப்ரஷான பாலை மீண்டும் சேர்க்கக்கூடாது. அதே போல ஏற்கனவே பால் எடுத்துக் கொடுத்த கண்டய்னரில் சுத்தம் செய்யாமல் மீண்டும் அதிலேயே பால் எடுத்துக் கொடுக்கக்கூடாது.
பாலை சூடுபடுத்த ஓவனை பயன்படுத்தக்கூடாது? ஏனென்றால் ஓவனில் ஒரே மாதிரியான சூடு இருக்காது. மேலே அதிக சூடாகவும் கீழே குறைவான சூடாகவும் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கும் டெம்ப்பரேச்சரை குழந்தை குடிக்கும் போது அதற்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே போல ஓவனில் அதிகப்படியான டெம்ப்பரேச்சர் இருக்கும். இது, பாலின் சத்துக்கள் ஆவியாகி வீணாவதற்கு காரணமாகிவிடும்.

தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்தக்கூடாது. டபுள் பாய்லிங் முறைப்படி சூடுபடுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதற்குள் தாய்ப்பால் கண்டய்னரை வைத்து சூடுபடுத்தலாம். அதிக சூடாக்குவதோ அல்லது வேகமாக குலுக்குவதோ கூடாது.

கண்ணாடி குடுவையில் தாய்ப்பாலை சேமிப்பது ஆரோக்கியமானது. அல்லது தாய்ப்பாலை சேமிப்பதற்க்கென்றே சந்தையில் கிடைக்கும் மில்க் பேக் பயன்படுத்தலாம். தாய்ப்பால் நிரப்பும் போது கண்டய்னர் முழுவதும் வருமாறு நிரப்பக்கூடாது. மூன்று இன்ச் வரை இடைவெளி இருக்க வேண்டும்.

தாய்ப்பாலை பிரிட்ஜில் சேமித்து வைக்கும் போது ப்ரீசரில் நடுவில் வைப்பதையே வழக்கமாக கொள்ளுங்கள். பிரிட்ஜின் ஓரங்களில் அல்லது கீழே வைப்பதால் ஒரே மாதிரியான குளிர் பரவாது.

24 மணி நேரம் வரை தாய்ப்பாலை பதப்படுத்தி பயன்படுத்தலாம். வெளியில் எடுத்து சூடுப்படுத்திய பின்னர் பயன்படுத்தலாம். இரண்டாம் முறை மூன்றாம் முறை என சூடுபடுத்தி பயன்படுத்தக் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்க ராசிய சொல்லுங்க… உங்க அந்தரங்க வாழ்க்கையப் பத்தி தெரிஞ்சிக்கோங்க…!!
Next post பேயை பார்த்து பயந்த சூரி! வைரலாகும் காணொளி..!!