மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உயிருள்ள பெண் பொம்மை..!!
ஜப்பானில் உயிருள்ள பெண்ணைப் போல் வடிவமைக்கப்பட்ட பொம்மை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
லூலு ஹசிமோட்டோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பொம்மைக்கென பிரத்தியேகமாக உடைகள் வடிவமைக்கப்பட்டு அவை விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
மக்கள் நடமாட்டம் மிகுந்த டோக்கியோ நகரில் லூலு ஹசிமோட்டோ அழகாக நடந்து செல்லும் காட்சிகளும், நடனமாடும் விதமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
அழகிப் போட்டி ஒன்றில் அரை இறுதிக்குத் தேர்வான 134 மாதிரிகளில் ஹசிமோட்டோவும் ஒன்று.
இந்த பொம்மையை ஜப்பானைச் சேர்ந்த 23 வயதான பேஷன் டிசைனர் ஹிடோமி கோமகி வடிவமைத்துள்ளார்