தினமும் 375 கிராம் காய்கறி-பழம் சாப்பிட்டால் இருதயநோய் வராது: ஆய்வில் புதிய தகவல்..!!

Read Time:1 Minute, 56 Second

201708301157217733_daily-375-Gram-vegetable-and-fruit-eat-Heart-disease-does_SECVPFசத்தான உணவு பொருட் கள் குறித்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. கனடாவில் ஹமில்டனில் உள்ள சுகாதார அறிவியல் நிறுவனம் மற்றும் மெக்மாஸ்டர் பல்கலைக் கழக சுகாதார ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர்.

கனடா, இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த 1 லட்சத்து 35 ஆயிரம் பேரிடம் இது நடத்தப்பட்டது. அதில் 35 முதல் 70 வயது வரை உள்ளவர்களிடம் அவர்களது உணவு பழக்க வழக்கங்கள் குறித்து 10 வருடங்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சராசரியாக தினசரி 375 கிராம் முதல் 500 கிராம் வரை பழங்கள் மற்றும் காய்கறி சாப்பிடுபவர்களுக்கு இதயம் பலப்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வராது. அதன் மூலம் குறைந்த வயதினரை மரணம் நெருங்காது என தெரிய வந்துள்ளது.

அதுவும் வேக வைத்த காய்கறிகளை விட பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது உடல் நலனுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பீன்ஸ், பட்டாணி, கருப்பு பீன்ஸ் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலுக்கும், இருதயத்துக்கும் நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தினமும் உணவில் 400 கிராம் முதல் 800 கிராம் வரை பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன் படுத்தும்படி பொது மக்களிடம் டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `சாமி-2′-க்கு பிறகு முன்னணி இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்?..!!
Next post ஆண்கள் வாய்வழி உறவை அதிகம் விரும்புவது ஏன்?…!!