தினமும் குறைவாக தண்ணீர் குடித்தால் பாதிப்பு ஏற்படுமா?..!!

Read Time:4 Minute, 18 Second

201709060822467383_not-drinking-water-regularly_SECVPFநாள் ஒன்றுக்கு 2-2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகின்றது. 8-10 கிளாஸ் அளவு என்று எளிதாய் புரிய வைக்கின்றனர். ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதனைப் பாருங்கள். அனைவரும் ஒழுங்காய் தண்ணீர் குடிப்பீர்கள்.

* தண்ணீர் உடலின் சக்திக்கான முக்கிய பொருள். தண்ணீர் பற்றாமை என்னஸம் செயல்பாட்டினை உடலில் குறைத்துவிடும். இதனால் சோர்வு அதிகமாய் ஏற்படும்.

* உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது சுவாச காற்று மாற்றம் குறைபடும். காரணம் இருக்கும் நீர்சத்தினை உடலில் தக்க வைக்க உடல் எடுக்கும் முயற்சி இது. இதனால் ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படக் கூடும்.

* நீர் சத்து உடலில் குறையும் போது இருக்கும் நீர் சத்தினை தக்க வைக்க அதிக கொழுப்பு சத்தினை உருவாக்கும்.

* உடலில் நீர் சத்து குறையும் பொழுது அதிக நச்சுப் பொருட்கள், ஆசிட் கழிவு இவை தேங்குவதால் கிருமிகள் தாக்குதல் சிறுநீரகம், சிறுநீரகப்பையில் ஏற்படும். கூடவே வீக்கம், வலி ஏற்படும்.

* குடல் உடலில் நீர் சத்தினை அதிகம் இழுக்கக் கூடியது. நீர்சத்து குறையும் பொழுது கழிவுகள் காலதாமதாக பெருங்குடலுக்குச் செல்லும். அல்லது செல்லாது தேங்கி, கடினப்பட்டு இருக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.

* மூட்டுகளுக்கு அதிக நீர்சத்து தேவை. நீர்சத்து குறையும் பொழுது மூட்டுகள் பலவீனப்படும், மூட்டு கடினப்படுதல், மூட்டு வலி ஆகியவை ஏற்படும்.
* நீர்சத்து குறையும் பொழுது செல்களுக்கு நீர் இல்லாததால் தாகம் எடுக்கும் பொழுது அவர்கள் அதனை உணராமல் அதிகம் உண்கின்றனர். இதனால் எடை கூடும்.

* தொடர்ந்து உடலில் நீர் குறைபாடு இருக்கும் பொழுது அனைத்து உறுப்புகளும், சருமம் உட்பட சுருங்கத் தொடங்குகின்றன. அதனால் இளவயதிலேயே முதுமை தோற்றம் பெறுவர்.

* ரத்தம் 92 சதவீதம் நீர் கொண்டது. நீர் குறையும் பொழுது ரத்தம் கடினப்படுகின்றது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.

* சருமம் உடலின் நச்சுப் பொருட்களையும், கழிவுகளையும் கூட வெளியேற்றும் வேலையினைச் செய்கின்றது. நீர் சத்து உடலில் குறையும் பொழுது சருமம் பல வகையான சரும பாதிப்புகளை ஏற்படுத்தும்.

* நீர் குறைபாடு வயிற்றுப் புண், அசிடிடி ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

* மனித உடலில் 75 சதவீதம் நீர்தான். 8-10 கிளாஸ் நீர் தினம் அருந்துங்கள் என்று சொன்னாலும் உடற்பயிற்சி, தட்ப வெப்பநிலை. கர்ப்பகாலம், தாய்பால் கொடுக்கும் காலம், நோய்வாய்பட்ட காலம் இவற்றில் கூடுதல் நீர் தேவைப்படும்.

காலை எழுந்தவுடன் பல்துலக்கி ஒரு கிளாஸ் நீர் அருந்துங்கள்
மனித உடலில் மூளை 75 சதவீதம் நீர் சத்து கொண்டது.
ரத்தம் 92 சதவீதம்
எலும்புகள் 22 சதவீதம்
தசைகள் 75 சதவீதம் நீர் கொண்டது.
உங்களுக்கு தாகம் எடுக்கும் பொழுதே உடலில் நீர்சத்து குறைந்துவிட்டது. என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு பேரால் ஊரே காலியாகும் நாடோடி கனவு..!!
Next post சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்கள் என்ன செய்தார்கள்?..!!