7 பற்களுடன் பிறந்த அதிசயக் குழந்தை – 1 மாதத்தில் நடந்தது என்ன?…!!
குஜராத் மாநிலத்தில் பிறந்து 1 மாதமே ஆன பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் 7 பற்கள் அகற்றப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, குழந்தை பிறந்த நான்கு நாட்களுக்கு பின்னர் தான் கீழ்ப்பகுதியில் 7 பற்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனால் குழந்தையால் தாய்ப்பால் குடிக்க முடியவில்லை, இதனைத் தொடர்ந்து மருத்துவர் ரமாதிரியை அணுகியுள்ளனர்.
அவர் இரண்டு கட்டமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் வாயில் இருந்த பற்களை அகற்றியுள்ளார், முதல் அறுவை சிகிச்சையின் போது 4 பற்களையும், இரண்டாவது அறுவை சிகிச்சையின் போது 3 பற்களையும் நீக்கியுள்ளார்.
மருத்துவர் கூறியதாவது, இது சாதாரண ஒன்று தான், இந்த பற்களின் வளர்ச்சி நீண்ட நாட்களுக்கு இருக்காது, எனவே இதனை நீக்கியாக வேண்டும் இல்லையென்றால் குழந்தைக்கு பற்கள் வளர்வதில் பிரச்சனை இருக்கும் என கூறியுள்ளார்.
Average Rating