மலைப்போல் குவிந்து கிடக்கும் கொடிய பாம்புகள்… தெறிக்கும் எரிமலை… நரகம் பூமியில்தான் இருக்கிறது?…!!

Read Time:5 Minute, 41 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)இயற்கை கடவுள் கொடுத்த பரிசு. இந்த இயற்கையில்தான் சொர்க்கம், நரகம் இரண்டும் இருக்கின்றது. உலகில் நாம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.

உலகில் தினமும் மாறுபட்ட சுற்றுச்சூழலில் வாழும் உங்களை பார்ப்பதற்கு சாத்தியமில்லாத இடத்தை பற்றி நினைவூட்ட போகின்றேன். பிரம்மிப்பாக நீங்கள் நினைத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இன்றைக்கும் கூட மனிதர்களின் காலடித் தடம்கூட பதியாத பல இடங்கள் உலகில் இருக்கின்றன.

அவை, இயற்கையின் அற்புதத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப் பூலோக சொர்க்கம் என சொக்கி நிற்கும் அளவிற்கு நம்மை அச்சுறுத்துகிற ஏராளமான இடங்களும் உலகில்தான் இருக்கின்றது.

அப்படி இருக்கக்கூடிய உலகின் ஆபத்தான இடங்களில் குறிப்பிட்ட நான்கு இடங்களை பற்றி மட்டும் இங்கு பார்க்கலாம்.

பிரேசில் பாம்புத்தீவு

பிரேசிலில் இருக்கும் ஒரு குட்டித்தீவு தான் பாம்புத்தீவு. ஒரு சதுர அடிக்கு 5 பாம்புகள் இருக்கும். இது கிழக்கு கலிபோர்னியாவில் உள்ள மரணப்பள்ளத்தாக்கு என வர்ணிக்கப்படுகின்றது.

இந்த பாம்புகள் அனைத்தும் கொடிய விஷத்தன்மை உடையதால், இங்கு செல்ல பிரேசில் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

உலகத்தில் வித்தியாசமான, விதவிதமான உயிரினங்கள் மற்றும் பறவைகள் வாழும் இந்த இடத்தை பார்க்க அழகாக இருந்தாலும், இங்கு சென்றால் உண்மையாகவே உயிருடன் திரும்ப முடியாது.

ஏனெனில் அவ்வளவு ஆபத்தான இடமாகும். இந்த இடத்தில் உள்ள உயிரினங்கள் அல்லது செடிகள் உரசினாலோ எரிச்சலும், மயக்கமும் ஏற்படும் அளவிற்கு தாவரங்களில் தொடங்கி, விலங்குகள் அனைத்தும் ஆபத்தான விஷத்தன்மை உடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காலநிலைகளை கொண்ட இந்த தீவில் பாறைகள் சூழ்ந்த மழைக்காடுகள் காணப்படுகின்றன. மனிதர்கள் வாழ தகுதியற்ற இத்தீவில் சில ஆராய்ச்சியாளர்களும் பிரேசில் இராணுவமும் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுமத்ரா எரிமலை தீவு

இந்தோனேசியாவில் சுமத்ரா எனும் தீவில் சினாபுங் எரிமலை ஒன்று உள்ளது. இந்த இடத்தின் வெப்பநிலை கிட்டத்தட்ட 57.7 செல்சியஸ் வரை உள்ளது.

தண்ணீர் இல்லாமல் அதிகபட்சமாக இந்த இடத்தில் 14 மணி நேரம் மட்டுமே உயிருடன் வாழ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவருகிறது. வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது சீற்றம் கொள்ளாமல் இருந்ததில்லை.

எப்போது சீற்றம் ஏற்படும் என்ற பயத்திலும், சீற்றம் ஏற்பட்டால் சுமார் 2,500 மீட்டர் வரை தெறிக்கும் எரிமலைக் கற்களிலும், சூழ்ந்துகொள்ளும் புகைமண்டலத்திலும் யார்தான் வாழமுடியும்?

ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் தான் இந்த டனாகில் பாலைவனம் அமைந்துள்ளது.

இந்த பாலைவனத்தில் சராசரி வெப்பநிலையே கிட்டதட்ட 500 செல்சியஸிற்கும் மேலாகத்தான் இருக்கும்.

இந்த பாலைவனத்தில் எந்த நேரத்தில் சீறும் எரிமலைகளும், நச்சு வாயுக்களை உமிழும் வெந்நீர் ஊற்றுக்களும் ஏராளமாக உள்ளன.

’’உலகின் நரகம்’’ என்று இந்த பகுதியைதான் அழைக்கின்றனர். ஆனாலும் சாகசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இன்றும் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.

மவுண்ட் வாஷிங்டன் அதிவேகமான காற்று

உலகிலேயே அதிவேகமான காற்று வீசும் இடம் மவுண்ட் வாஷிங்டன் ஆகும். அதிகபட்சமாக ஒரு மணிநேரத்திற்கு 203 மைல்கள் வேகத்தில் இங்கு காற்று வீசியிருக்கிறது.

(ஷோயப் அக்தர் போட்டதே மணிக்கு 160 கிமீ தான்) மேலும் மைனஸ் 40 டிகிரிக்கும் கீழ் குளிர், திடீரென்று ஏற்படும் பனிப்பொழிவு என மிகவும் ஆபத்தான இடமாக இருக்கும் இந்த சிகரம், உலகின் உயரமான (கடல் மட்டத்தில் இருந்து 6,288 அடி) மலைச் சிகரங்களுள் ஒன்றாக காணப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே படத்தில் விஜய், மகேஷ்பாபுவை இயக்க தயார்: ஏ.ஆர்.முருகதாஸ்…!!
Next post ஹரஹர மஹாதேவகி படத்தில் நடித்தது ஏன்? – நிக்கி கல்ராணி பதில்…!!