மூளை அறுவை சிகிச்சையின் போது பாகுபலி படம் பார்த்த விசித்திர பெண்…!!(வீடியோ)
ஆந்திர பிரதேசம் மாநிலம் குண்டூரில் உள்ள மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையின் போது நோயாளி பாகுபலி படம் பார்த்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூளை அறுவை சிகிச்சையின் போது பாகுபலி படம் பார்த்த விசித்திர பெண் – வைரலாகும் வீடியோ
ஐதராபாத்:
ஆந்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த வினாய குமாரி ( 43 ) என்ற பெண்ணிற்கு மூளையில் கட்டி இருந்தது. அவருக்கு குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது அவர் விழித்திருக்க வேண்டியது அவசியம் என்பதால் அவருக்கு பிடித்த படமான பாகுபலி-2 திரையிடப்பட்டது.
மூளையை திறந்து சிகிச்சை செய்து கொண்டிருக்கும் போது பாகுபலி படம் பார்த்தது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் மூளையில் உள்ள கட்டியை நீக்கும் போது அப்படத்தின் பிரபல பாடலை பாடிக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், அறுவை சிகிச்சையானது 1 மணி நேரம் 30 நிமிடங்களில் முடிவடைந்தது. நோயாளி சிறிதும் பயப்படவில்லை. அவர் படத்தை ரசித்துக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிவடைந்தது என கூறினர்.
Average Rating