ஓவியாவை பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் போக வேண்டாம் என்று கூறியவர் இவர்தானாம்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 13 Second
பிரபலமாக ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றிருந்த நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சியில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டனர், ஆனால் ஒருவர் வெளியேறியது மட்டும் ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை கொடுத்தது.அது வேறு யாரும் இல்லை ரசிகர்களின் நாயகி ஓவியா தான்.
இவர் மீண்டும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்ட ரசிகர்கள் பலர், ஆனால் அவரோ நான் நிகழ்ச்சிக்கு மீண்டும் போக மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் ஓவியா, தனக்கு BiggBoss நிகழ்ச்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் என் அப்பா எனக்கு நிகழ்ச்சியால் ஏற்பட்ட சில மனக் குழப்பங்களை நினைவில் வைத்து என்னை மீண்டும் நிகழ்ச்சிக்கு போக வேண்டாம் என்று கூறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
Average Rating