மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது..!!

Read Time:2 Minute, 2 Second

இந்தி பட உலகினர், பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே காந்தி அடிகள், அம்பேத்கர், இந்திராகாந்தி, பகத்சிங், தெண்டுல்கர், டோனி உள்பட பலருடைய வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாகி திரைக்கு வந்திருக்கிறது.

அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்த படத்துக்கு ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்று பெயர் வைத்துள்ளனர். மன்மோகன்சிங் தற்செயலாக பிரதமர் ஆனதை குறிப்பிடும் வகையில் இந்த தலைப்பை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.

மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கெர் நடிக்கிறார். சுனில்போஹ்ரா தயாரிக்கும் இந்த படத்தை விஜய் ரத்னாகர் குட்டே இயக்குகிறார்.

ரிசர்வ் வங்கி கவர்னராகவும், உலக வங்கியில் முக்கிய பொறுப்பிலும் இருந்த மன்மோகன்சிங்கை நிதி அமைச்சர் ஆக்கியவர் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ். பின்னர் மன்மோகன்சிங்கை சோனியாகாந்தி பிரதமர் ஆக்கினார்.

10 வருடங்கள் சிறந்த பிரதமராக நாட்டை ஆண்ட மன்மோகன்சிங்கின் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், நடந்த நிகழ்வுகள் ஆகியவை இந்த படத்தில் இடம் பெறுகின்றன. காங்கிரஸ் கட்சியின் பிரதமரான மன்மோகன்சிங் வேடத்தில் நடிக்க இருக்கும் அனுபம்கெர் பா.ஜனதா ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருத்தப்பட வேண்டிய தவறுகள்..!! (கட்டுரை)
Next post கட்டிலில் கதறி துடித்த மனிதர்… என்ன காரணம் தெரியுமா?..!! (வீடியோ)