படப்பிடிப்பில் கீழே விழுந்த கீர்த்தி சுரேஷ்… அதிர்ச்சியடைந்த ரசிகர்களுக்கு காத்திருந்த உண்மை..!! (வீடியோ)
படப்பிடிப்பில் வழுக்கி விழுந்து கீர்த்தி சுரேஷ் காயம் என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். தமிழில் அவர் சூர்யாவுடன் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.
வீடியோவில் ஆற்று நீரில் பெண் ஒருவர் ஆடும்போது வழுக்கி விழுகிறார். அந்த பெண் கீர்த்தி சுரேஷ் தான் கூறி ஆளாளுக்கு அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.
அந்த வீடியோவில் இருப்பது நீங்களா மேடம் என்று ரசிகர் ஒருவர் பதறிப் போய் கீர்த்தியிடம் கேட்டுள்ளார்.
வீடியோவில் இருப்பது கீர்த்தி சுரேஷ் இல்லை என்றும், அவர் நலமாக இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்களாம்.
Pls clarify mam…its u in dis video??? #KeerthySuresh @KeerthyLovers pic.twitter.com/zGZaROGxg4
— Muthu Vel (@muthuvelkannan) November 8, 2017