கொதிக்கும் எண்ணெய்யை வாடிக்கையாளர் மீது ஊற்றிய கொடுர ஊழியர்..!! (வீடியோ)
மும்பையில் சாலை ஓர ஹொட்டல் ஒன்றின் ஊழியர் வாடிக்கையாளர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையின் உல்லாஸ் நகரில் சாலை ஓர பாஸ்ட்பூட் உணவகத்திற்கு நண்பர்களுடன் சென்ற ஒரு இளைஞன் உணவின் சுவை குறித்தும், கட்டணம் குறித்தும் பிரச்சனை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான மோதலில் இளைஞர் தரப்பில் கையில் உள்ள எதோ ஒரு பொருளை எடுத்து உரிமையாளர் மீது வீசியதையடுத்து கொதிக்கும் எண்ணெய்யை இளைஞர் மீது ஊற்றியுள்ளார்.
எண்ணெய் ஊற்றியதால் இளைஞன் பலத்த காயம் அடைந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து உணவக ஊழியர் மற்றும் உரிமையாளரை பொலிசார் கைது செய்துள்ளனர்.