நேபாள மன்னர் ஞானேந்திரா அரண்மனையை விட்டு வெளியேறினார்; 124 ஆண்டு கால அரண்மனை மிïசியமாக மாற்றப்படுகிறது

Read Time:3 Minute, 52 Second

நேபாள மன்னர் ஞானேந்திரா அரசாங்கம் விதித்த கெடுப்படி நேற்று அரண்மனையை விட்டு வெளியேறினார். நேபாள நாடு கடந்த 240 ஆண்டுகளாக மன்னராட்சியின் கீழ் இருந்து வந்தது. மன்னராட்சியை அகற்றி விட்டு குடியாட்சியை கொண்டுவரவேண்டும் என்பதற்காக மாவோயிஸ்டுகள் ஆயுதம் தாங்கி போராடினார்கள். இந்த போராட்டத்தை ஒடுக்கமுடியாமல் ஆட்சியாளர்கள் சிரமப்பட்டனர். இதனால் பிரதமர் தலைமையில் செயல்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்து விட்டு மன்னரே நேரடியாக ஆட்சி அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டார். அவர் தனக்கு கட்டுப்பட்ட பொம்மைஆட்சியை நடத்தினார். இந்த ஆட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லாமல்போய் விட்டது. மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு, மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மன்னர் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியை கொண்டு வர உறுதி அளித்தார். இதன் மூலம் அவர் செல்வாக்கு இழந்தார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் கூட்டத்திலேயே மன்னர் ஆட்சியை ரத்து செய்ய தீர்மானம் கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து மன்னர் ஞானேந்திராவும் இன்று 12-ந்தேதிக்குள் அரண்மனையை காலி செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை ஏற்றுக்கொண்டு மன்னர் ஞானேந்திரா நேற்று மாலை அரண்மனையை விட்டு வெளியேறினார். அவர் சாதாரண குடிமகனாக நேபாளத்திலேயே வாழ இருக்கிறார். அரண்மனையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு,அவர் வைரக்கற்கள் பதித்த கிரீடத்தையும், அரச வாளையும் அரண்மனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்த இரண்டும் லண்டனில் சமீபத்தில் ஏலத்துக்கு வந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்து சர்ச்சையை கிளப்பின. மன்னரும், அவர் குடும்பத்தினரும் வசித்த 124 ஆண்டுகால பழமையான அரண்மனையை மிïசியமாக மாற்றி அமைக்க அரசாங்கம் திட்டமிட்டு உள்ளது.

மன்னரின் பாட்டிக்கு அனுமதி

இந்த அரண்மனைக்குள் 2 கட்டிடங்களில் மன்னரின் மாற்றாந்தாய் ரத்னாவும்(வயது 82), 91 வயது பாட்டி சரளாவும் வசித்து வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து அங்கேயே தங்கி கொள்ள அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டு உள்ளனர். இதனால்,அவர்கள் அங்கு தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

நேபாள நாட்டின் முதல் ஜனாதிபதியாக நியமிக்கப்படுபவர் தங்குவதற்கு பொருத்தமான மாளிகையை தேர்ந்து எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். வெளிநாட்டு அமைச்சரக அலுவலகம் உள்ள ஷீதல் நிவாஸ் அல்லது தேர்தல் கமிஷன் கட்டிடமான பகதூர் பவன் முதல் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வமான இல்லமாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுக்குடியிருப்பில் விமான குண்டுவீச்சு
Next post தென்கொரியாவில்; அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதி எதிர்ப்பு பேரணியில் 80ஆயிரம் பேர்