திருகோணமலை -மட்டக்களப்பு ஆயர் பேரருள் கிங்சிஸி சுவாம்பிள்ளை தெரிவிப்பு

Read Time:1 Minute, 32 Second

ஒவ்வெருவருக்குள்ளேயும் குடும்பங்களுக்;குள்ளேயும் சமாதானம் உருவாகும் போதே நாட்டில் நிலையான சமாதானம் மலருமென்று மட்டக்களப்பு திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கூறியுள்ளார். சமாதானமென்பது இன்றோ நாளையோ மலர்ந்துவிடாது என குறிப்பிட்ட ஆயர் பொறுமையை கடைப்பிடிப்பதன் மூலம் சமாதானத்தை எட்டமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமாதானம் ஏற்படாது என்ற உணர்வை களைந்து நம்பிக்கையுடன் இருப்பதன் மூலம் சமாதானத்தை அடைய முடியுமென்று ஆயர் பேரருள் கலாநிதி கிங்ஸிலி சுவாம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாக இளைய சமூதாயமே பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர் சமாதானத்திற்காக அவர்கள் உழைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார் திருமலை கலா மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்தவ இளைஞர்களுக்கான சமாதான செயலமர்வில் கலந்துகொண்டு பேசுகையில் ஆயர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஏமன் நாட்டில் கூட்ட நெரிசலில் சிக்கி 24 பேர் பலி
Next post சீனாவில் நாளொன்றுக்கு 192 பேர் எச்.ஐ.வி.யால் பாதிப்பு