மெர்சல் பாடலை பாடிய பிக்பாஸ் ஹரீஸ்..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாக அடுத்த படியாக மக்களின் செல்லமாக திகழ்ந்தவர் ஹரீஸ் கல்யாண்.
இதனால் ஓவியா ஆர்மி போல ஹரீஸ் ஆர்மியும் உண்டானது. தற்போது அவர் இளன் இயக்கத்தில் பியார் பிரேம் காதல் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அவருக்கு ஜோடியாக ரைஸா நடிக்கிறார். நேர்காணல் ஒன்றில் பேசிய ஹரீஸிடம் நீங்கள் அஜித், விஜய் போல இருப்பதாக நிறைய பேர் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டிருந்தனர் என சொல்லப்பட்டது.
இதற்கு ஹரீஷ் தல, தளபதி இரண்டு பேரையும் பிடிக்கும். ஆனால் நான் தளபதி ரசிகர் என கூறியதோடு மெர்சல் படத்தில் வந்த நீதானே நீதானே பாடலை பாடியுள்ளார்.