செல்பி எடுத்த மாணவனைப் பாய்ந்து தாக்கிய அமைச்சர்..! (வீடியோ)
கர்நாடக மாநிலத்தில் மின்துறை அமைச்சராக இருப்பவர் டி.கே. சிவக்குமார் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவனின் கையை வேகமாக தட்டிவிட்டு தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அம்மாநிலத்தில் குழந்தைகள் உரிமைகள் தொடர்பான நிகழ்ச்சி இன்று பெல்காமில் நடைபெற்றது.
இதில் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்தார். இதன்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.