3 வயது சிறுமிக்கு திருமணம்…. 14 வருடம் கழித்து நீதிமன்றம் பதில்..!!
3 வயது சிறுமிக்கும் 11 வயது சிறுவனுக்கும் நடந்த கட்டாய திருமணத்தை 14 வருடம் கழித்து நீதிமன்றம் நிராகத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு குடும்பத்தினர் தன் 3 வயது சிறுமிக்கும் 11 வயது சிறுவனுக்கும் கடந்த 2003 ஆம் ஆண்டு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். பின் சிறுமியின் தந்தை இறந்துள்ளார். இதனால் சிறுமியின் பள்ளி படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
சிறுவனின் வீட்டார் சிறுமியை தங்கள் வீட்டில் விடுமாறு கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 14 வருடம் கழித்து தன்னார்வ அமைப்பு ஒன்றின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
இரு தரப்பினரையும் அழைத்து பேசிய நீதிமன்றம் சிறுமியையும் சிறுவனையும் பிரித்து திருமணம் செல்லாது என நிராகத்து தீர்ப்பளித்தது.