வருங்கால மருமகள் குள்ளமாக இருந்ததால் மாமியார் செய்த விபரீத செயல்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 11 Second

மகனை திருமணம் செய்யவிருந்த பெண் மிகவும் குள்ளமாக இருந்ததால் அந்த திருமணத்தில் உடன்பாடில்லாத தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் நிங்லிங் கவுண்டியில் தன் இச்சம்பவம் நடந்துள்ளது. லின் (47) என்ற பெண் கடந்த 17-ஆம் திகதி அங்குள்ள ஒரு நதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் சடலத்தை பொலிசார் கைப்பற்றிய நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் லின்னின் கணவர் காவோ (46)-வும் நதியில் குதித்தார்.ஆனால் பொலிசார் அவரை காப்பாற்றினார்கள்.

பொலிஸ் விசாரணையில் லின் நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.லின் மகனுடன் விரைவில் திருமணம் நிச்சயமாகவுள்ள பெண் விலை அதிகமான பொருட்கள் மற்றும் காரை தனக்கு பரிசாக கொடுக்கும்படி கேட்டதாகவும், அதற்கான வசதி தன்னிடம் இல்லாததால் அந்த வருத்தத்தில் லின் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதலில் கூறப்பட்டது.

ஆனால் இதை நிங்லிங் கவுண்டி அரசு மறுத்துள்ளதுடன் வேறு காரணத்தை வெளியிட்டுள்ளது.அதில், தனது மருமகளாக வரவிருக்கும் பெண் மிகவும் குள்ளமாக இருந்ததால் அவரை லின் வெறுத்துள்ளார்.

தன்னை மீறி அவரை மணக்க நினைத்தால் தற்கொலை செய்துகொள்வேன் என முன்னரே லின் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லின் கணவர் காவோவும், அவரின் மகனும் இன்னும் விளக்கமளிக்கவில்லை.

http://video.dailymail.co.uk/video/mol/2017/11/23/5058172683230688647/640x360_MP4_5058172683230688647.mp4?_=1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்க்கரை நோயாளிகளின் கண்களில் ஏற்படும் பாதிப்புகள்..!!
Next post மனைவி அனுமதி கொடுத்த மறுகணம் ரோபோவுடன் உடலுறவு கொண்ட ஆண்!!