சண்டைக்காட்சியில் ஜேம்ஸ்பாண்டு’ நடிகருக்கு மீண்டும் காயம்
Read Time:1 Minute, 8 Second
சமீப காலமாக டேனியல் கிரெய்க் என்ற நடிகர், ஜேம்ஸ்பாண்டாக நடித்து வருகிறார். ஏற்கனவே `கேசினோ ராயல்’ படத்தில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த அவர், தற்போது `குவாண்டம் ஆப் சோலஸ்’ என்ற படத்தில் அந்த வேடத்தில் நடித்து வருகிறார். லண்டனில் பைன்வுட் ஸ்டூடியோவில் இப்படத்தின் சண்டைக்காட்சியில் நடித்தபோது, டேனியல் கிரெய்க்குக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவரது விரல் நுனி துண்டாகி விட்டதாக கூறப்படுவதை பட நிறுவனம் மறுத்துள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் சண்டைக்காட்சியில் நடித்தபோது, டேனியலுக்கு முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டு 8 தையல்கள் போடப்பட்டன.
Average Rating