சார்க் மாநாடு: இந்திய அதிகாரிகள் குழு இலங்கை போய் சேர்ந்தது

Read Time:1 Minute, 15 Second

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஆகஸ்டு மாதம் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் மாநாடு (சார்க்) நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று டெல்லியில் இருந்து இலங்கை சென்றனர். நேற்று மாலை அவர்கள் கொழும்பு போய் சேர்ந்தனர். இந்திய குழுவில் வெளிநாட்டு துறை செயலாளர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு துறை செயலாளர் விஜய் சிங் ஆகியோரும் இடம் பெற்று உள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சேயை, இந்திய குழுவினர் இன்று சந்தித்து பேசுகிறார்கள். இலங்கையின் வெளிநாட்டுத்துறை செயலாளரையும், பாதுகாப்பு துறை செயலாளரையும் சந்திக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 யு.எஸ். ஹெலிகாப்டர்களை தலிபான்கள் கடத்தினர்
Next post ஜப்பானில் கடந்த வருடம் 33,000 பேர் தற்கொலை