தமிழரின் கலாச்சாரத்தில் மயங்கிய ஜப்பான் காதல் ஜோடி: வியக்க வைத்த திருமணம்..!!

Read Time:2 Minute, 14 Second

தமிழர் கலாச்சாரத்தால் கவரப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி இந்து முறைப்படி மதுரையில் திருமணம் செய்துகொண்டனர்.ஜப்பான் – டோக்கியோவைச் சேர்ந்தவர் யூடோ நினாகா என்பவர் அங்குள்ள கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த தனியார் விமான போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிகிற சிகாரு ஒபாதா என்பவரை கடந்த ஏப்ரலில் ஜப்பானில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.யூடோ நினாகா மற்றும் சிகாரு ஒபாதா இருவரும் தமிழ் மொழியை தடையின்றி அழகாக பேசுவார்கள்.

இந்த நிலையில் தமிழர்களின் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட சிகாரு – யூடோ தம்பதி தமிழர் கலாச்சார பின்னணியில் இந்து முறைப்படி மதுரையில் திருமணம் செய்யத் திட்டமிட்டனர்.இதையடுத்து மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஜப்பான் ஜோடி மற்றும் அவர்களது உறவினர்கள் மதுரை வில்லாபுரம் வந்தார்கள்.

இதில், அனைவரும் தமிழர் கலாச்சாரப்படி வேஷ்டி, சேலை அணிந்திருந்தனர். தமிழ், ஜப்பான் மொழிகளில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது.

முகூர்த்த நேரத்துக்கு முன் மணமக்கள் அருகேயுள்ள கோயிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

மணமகனுக்கு பட்டு வேஷ்டி, சட்டை, மணமகளுக்கு பட்டுச்சேலை அணிவித்திருந்தனர். தமிழர் சடங்கு முறைகள் நடைபெற்ற பின் மணமகன் யூடோ, மணமகள் சிகாருவின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வித்தியாசமான வேடங்களில் சமந்தா..!!
Next post அரசியலில் மும்முரம்: உறுப்பினர்களை சேர்க்க புதிய இணையதளத்தை தொடங்கினார் ரஜினி..!!