10 ஆண்டுகளுக்கு பிறகு வளர்த்தவரிடம் திரும்பிய புறா

Read Time:1 Minute, 54 Second

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் டினோ ரீடர்டன். இவர் புறாக்களை வளர்த்து அவற்றுக்கு பயிற்சி அளிப்பதில் நிபுணர் ஆவார். இவர் பூமராங் என்ற புறா ஒன்றை வளர்த்து வந்தார். இதை 1998-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு நண்பருக்கு அன்பளிப்பாக கொடுத்தார். ஆனால் அங்கு சென்றதுமே, 1931 கி.மீ. தொலைவுக்கு பறந்து மீண்டும் டினோ ரீடர்டனிடமே திரும்பி வந்தது. உடனடியாக அதை அவருடைய மாநிலமான நார்த் யார்க்ஷைர் மாநிலத்தில் உள்ள பிலே என்ற நகரில் வசிக்கும் இன்னொரு நண்பரிடம் கொடுத்தார். மீண்டும் அது ரீடர்டன்னிடமே திரும்பி வந்தது. அதன்பிறகு கடைசியாக அதை அவர் இங்கிலாந்தில் லங்காஷைர் மாநிலத்தில் உள்ள அல்ப் பெனிங்டன் என்ற நண்பரிடம் பரிசாக கொடுத்தார். அதன் பிறகு ரீடர்டன் அந்த புறாவை பிறகு பார்க்கவில்லை. ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த புறா ரீடர்டன்னிடமே திரும்பி வந்தது. இப்போது அது திரும்பி வந்தபோது அது ரொம்பவும் களைத்து போய் இருந்தது. அதனால் நிற்கக்கூட முடியவில்லை. அதனால் அவர் அதற்கு அன்று முழுவதும் குளுக்கோஸ் கொடுத்தபடி இருந்தார். அதை வளர்த்து வந்த அல்ப் பென்னிங்டன் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போய்விட்டார். இதனால் அது எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணப் பதிவுக்காக 51 இலங்கை ஜோடிகள் மீண்டும் திருமணம்
Next post சீனாவில் பெண் போலீசுக்கு பதவி உயர்வு அளிப்பதற்கு எதிர்ப்பு